பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366 ஆனந்த முதல் ஆனந்த வரை பின்ாங்கு சிறியதிவு. சுமார் ஆறுகல் (9 கிலோ மீட்டர்) சுற்றளவு உள்ளது என்றனர், சுற்றிலும் வர நல்ல சாலைகள் இருந்தன. எங்கும் பழமரங்கள். அங்கே அதுவரை காணாத மங்குஸ்தான்-ரங்குஸ்தான் போன்ற பழங்கள் தவிர டொரியான் பழம் என்று ஒரு வகை பெரு மரங்களில் காய்த்துத் தொங்கின. அவற்றைக் கீழே விழாமல் தடுக்க, பெரிய வலைகள் மரக்கிளைகள் உயரக் கட்டி இருந்தன. விழுந்தால் உடைந்து பாழாகிவிடுமாம். அதை வீட்டில் கொண்டு வந்து ஒரு பழத்தை உடைத்துச் சுளை எடுத்தார் கள். அது பலாப்பழம் போல முள்ளுடையதாய் உள்ளே சுவையும் கொட்டையும் உடையதாய் இருந்தது. அதை அறுக்கும் போது ஒரே நாற்றம். சகிக்க முடியவில்லை. ஆனால் சுளையை எடுத்து உண்டபோது அது போன்ற சுளையை அதுவரையில் அனுபவித்ததில்லை என்று சொல்லத் தோன்றிற்று. இப்படித் தோற்றத்தாலும் மணத்தாலும் புறத்தே கொடியதாகத் தோன்றினாலும் உள்ளே இனிய இன்பம் இயைவதை எண்ணி, மாறாகப் புறத்தே இனிக்கப் பேசி உள்ளே உறுமும் மனித இனத்தை நினைத்தேன்; இப்பழ நிலை மனிதனுக்கு வராதா என மருகினேன். பினாங்கில் கூட்டத்தில் பெருமக்கள் பலர் கூடி இருந்தன்ர். பெருங் கூட்டம். கூட்ட முடிவில் பலர் வந்து பேசிச் சென்றார்கள். எனினும் வயதான ஒருவர் வந்து, ஐயா! நான் உங்கள் மாணவன்-தங்களைக் காண வந்தேன். என்றார். அவர் என்னினும் முத்தவராக இருந்தமையின் திகைத்தேன்-நான் மெய்கண்டாருமல்லன்-அவரும் அருள் நந்தியாருமல்லர், பிறகு அவரே என் திகைப்பைப் போக்கி னார். நான் பச்சையப்பரில் நாற்பதுக்கு முன் படித்தேன் (நான் 44ல் சேர்ந்தேன்). இன்று காலை செய்தித்தாளில், பச்சையப்பன் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் இங்கே பேச வருகிறார் என்று கண்டேன். நான் இங்கிருந்து எழுபது கல்