பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 . ஆனந்த முதல் ஆனந்த வரை பினாங்கினையும் சுற்றுப்புற ஊர்களையும் அங்குள்ள மக்களையும் கண்டு கொண்டே, அவர்களிடம் பேசியும் பழகியும் அவர்வர் கருத்துக்களைப் புரிந்து கொண்ட்ே மெல்லத் தெற்கு நோக்கிப் புறப்பட்டோம். திரும்பவும் கோலாலம்பூரில் சில நாட்கள் தங்கி மறுபடி சிங்கப்பூர் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. இசையில் கண்ட ஊர்கள் பல-பேசிய அன்பர்கள் பலர். கடைசியாக மலேயாவின் கோடி நகரான ஜோகூர் பாரு' என்ற ஊரில் வந்து ஒரு நாள் தங்கினேர்ம். அங்கே கூட்டங்கள் ஒன்றுமில்லை. அண்மையில் உள்ள் சிங்கப்பூர் நாகரிக வாடை அங்கே வீசியது. புதுமையான போலி நாகரிக வாழ்க்கை பற்றிய வரலாற்றையெல்லாம் அங்கிருந்த அன்பர் (திரு. அழகப்பர் என நினைக்கிறேன்) சொன்னார். இரவு உணவு உண்டபின் அமைதியான-அலைவற்ற அக்கடற்கரையில் இருந்த சிமெண்ட் பலகையில் உட்கார்ந்து பேசினோம். அருணாசலம் செட்டியார் இடையில் பிரிந்து மலாக்காவிற்கும் சென்று சிங்கப்பூருக்கு நேரே வருவதாகக் கூறி இங்குள்ள அன்பருக்குத் தொலைபேசி மூலம் என் வருகையை உண்ர்த்தினர். .." இங்கு வரு முன்போ-வந்த பின்போ எனக்கென இருந்த காரினையும் அனுப்பிவிட்டேன். அவர் மலாக்கா எடுத்துச் சென்றார். அங்குள்ள இரெயில் பயணம் பற்றி அறியவே, அதை அனுப்பி இரெயிலில் வந்தேன். இன்று இங்குள்ள இரண்டடுக்கு மூன்றடுக்குப் படுக்கைளெல்லாம் அன்றே அங்கு இருந்தன. அன்பர் அந்நாட்டு மக்கள் நிலையினையும் சிங்கப்பூரில் வ்ர்வர சீனர் ஆதிக்கம்-பெரிதும் வாணிபத்தில்அதிகமாகி வருவதையும் போருக்குப்பின் தமிழர் நிலை குறைந்து வருவதையும் குறித்து விளக்கினார். மற்றும் அவ்வூரில் அதிகமாக உள்ள-சிங்கப்பூர் செல்வந்தர்களுக்குப் பழக்கமான-சேக்கிழார் நாகரிகமாகக் கூறிய் பதி இலாக் குலத்து வந்தவர் தம் பான்மையும் விளக்கினார்.