பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 . ஆனந்த முதல்.ஆனந்த வரை பொருள்களைத் தந்தது மட்டுமன்றி, அச்சகத்தின் பெயர், தமிழ்க்கலை உரிமை அனைத்தையும் நானே கொண்டிருந் தேன். அதனாலேயே சென்னை அமைந்தகரையில் 1949இல் நான் சொந்தமாக அமைத்த வீட்டிற்கும் 'தமிழ்க்கலை இல்லம்’ என்றே பெயரிட்டேன். பின் 'தமிழ்க்கலை மன்றம்’ அமைத்தபோதும் நான் அதன் செயலாளனாகவும், டாக்டர் மு. வ. அவர்கள் தலைவராகவும் இருந்தமையின் அப்பெயர் அமைத்தலுக்கும் அதன் வழி வந்த முத்திங்கள் இதழுக்கும் மறுப்புத் தெரிவிக்கவில்லை. பின் நான் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தே ஆட்சிக்குழு உறுப்பினனாக இருந்த போது, இதே பெயரில் அங்கே தொடங்கிய முத்திங்கள் இதழினையும் ஏற்றுக் கொண்டேன். முன்னது சின்னாள் வாழ்வுடன் நின்றது. பின்னது நிலை அறியேன்? நான் சென்னையில் 'தமிழ்க்கலை தொடங்க நினைத்த - போது என் உடனிருந்த பேராசிரியர் அன்பழகன் அவர்கள் ஊக்கம் தந்தார்கள். அவரும் புதுவாழ்வு’ என்ற திங்க ளிதழைச் சில காலம் நடத்தி வந்தார். அவர்தம் அரசியல் செல்வாக்கில் அது நன்கு நடைபெற்றதாயினும் ஏனோ நிறுத்தப்பெற்றது. என் தமிழ்க்கலையை எங்கே அச்சிடுவது என எண்ணினேன். திங்கள் தோறும் குறித்த நாளில் வெளியிட்டு அஞ்சலில் குறித்த நாளில் குறைந்த செலவில் அனுப்பவேண்டும். அவ்வாறு நாள் தவறாமல் அச்சிட்டுத் தருபவர் யார் உளர் என எண்ணினேன். அப்போது நான் சைவசித்தாந்த சமாசத்தின் துணைச் செயலாளனாகவும் அது வெளியிட்ட திங்கள் இதழ் சித்தாந்தத்தின் துணை ஆசிரிய னாகவும் இருந்தேன். அந்த இதழ் சாது அச்சுக்கூடத்தில் அச்சிட்டு வெளியிடப் பெற்றது. அதற்கென அடிக்கடி சாது அச்சுக்கூடம் செல்வேன். அப்போதெல்லாம் இராயப் பேட்டை முனிவர் திரு. வி. க. அவர்களுடன் பல மணி நேரம் பேசிக்கொண்டிருப்பேன். அவர்கள் என் இளமையிலேயே