பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 373 இருமுறை எங்கள் கிராமத்துக்கு வந்ததையும் என் அன்னை யின் இறுதி நாள் வாழ்த்தினை வழங்கியதையும் அவரோடு என் இளமை தொட்டு இருந்த தொடர்பினையும் முன்பே குறித்துள்ளேன். அவர்கள் எனக்கு வழங்கிய ஆங்கில நற்சான்று இதழினையும் இன்றும் போற்றிப் பாதுகாத்து வருகின்றேன். ஒரு நாள் நான் அவர்களோடு பேசிக்கொண் டிருக்கையில் என் தமிழ்க்கலை"யினைப்பற்றி அவரிடம் கூறினேன். அவர்கள் உடனே தயக்கமின்றி ஏன்? இங்கேயே அச்சிடலாமே என்று கூறி, அச்சகப் பொறுப்பில் இருந்த நாராயணசாமி என்பவரை அழைத்து அதற்கு ஏற்பாடும் செய்துவிட்டார். பின் அதற்குரிய அரசர்ங்க இசைவும், அஞ்சலக இசைவும் பெற்று முறையாகத் தொடங்கிச் சென்னையிலிருந்து தமிழ்க்கலையினை நடத்தினேன். அதில் டாக்டர் மு. வ., டாக்டர் ரா. பி. சேதுபிள்ளை போன்றவர் கள் அவ்வப்போது கட்டுரைகளும் வாழ்த்தும் எழுதி என்னை ஊக்கினார்கள். என் உடன் ஆசிரியர்கள் ஒரு சிலரும்ஏன்?-என் மாணவரில் சிலரும் கூடக் கட்டுரைகள் கவிதைகள் எழுதினர்; இதழ் பரவுவதற்கு உதவியும் புரிந்தனர். இவ்வாறு நல்ல முறையில் ஐந்து ஆண்டுகள் சென்னையில் தமிழ்க்கலை திங்கள் இதழாக வெளிவந்தது. பிறகு நான் என் புது இல்லம் புகுந்தபோதும், வேறு பள்ளிகள் தொடங்க முயன்ற நிலையிலும் நாட்டில் பல்வேறு இதழ்கள் புற்றீசல் போலப் புறப்பட்டமையாலும் தமிழ்க்கலை வெளியீடு நின்றது. எனினும் தமிழ்க்கலைப் பதிப்பகம்’ என்ற பெயரில் இன்று வரை என் நூல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. நான், தமிழ்க்கலை நடத்தியபோது சென்னை மாநிலம் மொழிவாரி மாநிலமாகப் பிரிய ஏற்பாடு நடந்து கொண்டி ருந்தது. சென்னையை ஆந்திரத்துடன் இணைப்பது, அல்லது கூவம் ஆறு அன்றி பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையை எல்லையாக வடக்கும் தெற்கும் ஆந்திரம், தமிழ்நாடு