பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 375 பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் முதலிய சைவ நூல்களும் நாலாயிரம், சிந்தாமணி போன்ற பிறநூல்களும் அடக்க விலைக்கு வெளியிடப்பெற்றன. சைவத் தமிழ் மக்கள் அவருக்குப் பெரிதும் கடமைப் பட்டவராவர். - நான் 1931 இலிருந்து சைவசித்தாந்த மாநாடுகளுக்குச் சென்றுபோதிலும் 1934 திருவதிகை மாநாட்டில்-திரு. வி.க. தலைமையில் அதில் முற்றும் ஈடுபட்டேன். சிந்தாந்தத்தில் பல கட்டுரைகளும் கவிதைகளும் எழுதினேன். எனவே சென்னைக்குக் குடி வந்ததும் எனக்குத் துணைச் செயலாளர், துணை ஆசிரியர் பொறுப்பு இரண்டும் தரப்பெற்றன. சிவகாசி மாநாட்டில் இளைஞர் மாநாட்டுத் தலைவனாகவும் தொண்டாற்றினேன். நான்கைந்து ஆண்டுகள் தொடர்ந்து சித்தாந்த இதழினை -திரு பாலசுப்பிரமணிய முதலியார், திரு. வி.க. ஆகியோர் அரவணைப்பில் சிறப்பாக வெளியிடும் பேறு பெற்றேன். அக்காலத்தில் சித்தாந்தச் சந்தா தாரர்களும் அதிகமாயினர். பெரும்பாலும் தலையங்கம் எழுதும் பொறுப்பையும் பிழைதிருத்தும் பொறுப்பையும் என்னிடம் விட்டுவிட்டனர். அப்போது அமைந்தகரையி லிருந்து இராயப்பேட்டைக்கோ, மயிலைக்கோ, மவுண் ரோடுக்கோ போகவர பஸ் கிடையாது. நான் 15இல் செண்டிரல் சென்று, அங்கிருந்து 3, 4, 5 எண்ணுள்ள பஸ்கள் ஒன்றில் செல்வேன். சற்றே கடினமாயினும் மகிழ்ச்சியோடு அப்பணியினை மேற்கொண்டு செயலாற்றிவந்தேன். பின் பாலசுப்பிரமணிய முதலியார் மயிலைக்குக் குடி பெயர்ந்த பொழுதும் தொடர்ந்து சமாசத்தை நடத்திவந்தார். ஆயினும் அவர்கள் காலத்துக்குப் பின் அது நிலை குலைந்தது. இப்போது அது மயிலை வாடகை அறை ஒன்றில் அலுவலகம் அமைத்து ஓரளவு செயல்பட்டு வருகின்றது. அக்காலத்தில் கூட்டுறவு இயக்கம் சிறக்கச் செயலாற்றி வந்தது. இக்காலத்தைப் போலன்றி, பல பெரியவர்கள்