பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 377 அதில் ஒர் உறுப்பினனாக இருக்கப் பணித்ததோடு, நான் தமிழாசிரியனாக இருந்தமையின், அதன் புரூப் திருத்தல், கட்டுரைகள் தெளிவு செய்தல் போன்ற பணிகளை என்னிடம் ஒப்படைத்தனர். நான் 1966இல் ஐதராபாத் செல்லும் வரையில் அந்த ஆசிரியர் குழுவில் பணியாற்றினேன் என எண்ணுகிறேன் (திட்டமாக நினைவில்லை). இவற்றுக்கெல்லாம் மேலாகப் பாரததேவி நாளிதழின் பொறுப்பாசிரியனாகவும் மேலாளனாகவும் செயலாற்றிய செயல் முக்கியமானதாகும். மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் 1952இல் தேர்தலில் தோல்வியுற்ற ஞான்று, அவர் அப்பாரததேவியை நடத்தும் பொறுப்பினை ஏற்றார். அதனை நடத்திய நுங்கம்பாக்கம் ஐயர் அவர்கள் விரும்பி அதனை அவரிடம் ஒப்படைத்தார். அன்று தமிழ்நாடு காசி கிரஸ் கமிட்டியில் செயலாளராகவும் பாராளுமன்ற உறுப் பினராகவும் இருந்த ஆதம்பாக்கத்தில் வாழ்ந்த இராம கிருஷ்ண ஐயர் அதன் வெளியீட்டளராகவும் உரிமை உடைய வராகவும் பதிவு செய்யப் பெற்றார். அவர் ஐயர்' என்று நான் குறித்தாலும் அவர் அப்பெயரைப் போட்டுக் கொள்வ தில்லை; பூனூலும் அணிந்து கொள்ளவில்லை என எண்ணு கிறேன். மாண்புமிகு பக்தவத்சலமும் அவரும் எனக்கு மிகவும் நெருங்கியவர்களாதலின் என்னை அழைத்து என்னை மேலாளராகப் பொறுப்பேற்றுச் செயல்படச் சொன்னார் கள். நான் என்னுடைய கல்லூரிப் பணி செய்வதால் இயலா நிலையினைச் சுட்டினேன். அப்போது பாரததேவி காலை இதழாக நாள்தோறும் வெளிவந்தமையின் பிற்பகல் இரண்டு மணிக்குமேல் வந்துiஇரவு 9 மணிவரை இருந்துபத்திரிகையை ஒழுங்கு படுத்தியும் அலுவலகச் செயல்களை மேற்பார்வை யிட்டுச் செல்லவும் கேட்டனர். அதுவும் இயலாத ஒன்று என் பெயரையும் அங்கே குறிக்க முடியாத நிலை. எனவே அவர்கள் இருவரும் அன்று பச்சையப்பரை நடத்திச் சென்ற