பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 . ஆனந்த முதல் ஆனந்த வரை' றினார்கள். ஆம் அவர்கள் கடைசியாக ஒன்றும் செய்ய இயலாது படுக்கையாகப் படுத்த நாள்வரை ஏதேனும் தொண்டு செய்து கொண்டுதான் இருந்தார்கள். அவர்கள் சுதேசமித்திரனில் தொண்டாற்றிய போதும் என்னை அடிக்கடி வரச் சொல்லுவார்கள். நான் நிலையாக அங்கே எந்தப் பணியினையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும், ! அவ்வப்போது சென்று அவர்கள் இட்டபணியினைச் செய்து வந்தேன். இச் சுதேசமித்திரன் திரு.சீனிவாசன் அவர்கள் பொறுப்பில் நடந்த காலத்திலும் நான் அதில் அடிக்கடி கட்டுரைகள் எழுதுவேன். அங்கே பணியாற்றிய திரு. கோதண்டராமன் (பின் புதுவை அரவிந்த ஆச்சிரமத்தில் சென்று தங்கியவர்) அடிக்கடி வரச் சொல்லிக் கட்டுரைகள் எழுதச் சொல்லுவார். நூல்களுக்கு மதிப்புரை எழுதச் சொல்லி வரும் நூல்களைத் தருவார். அடுத்து அன்று இராசன் எலெக்டிரிக் பிரஸ் (சுங்குராமன் தெரு) நடத்திய 'அமுதசுரபி'யில் அதன் உரிமையாளர்களாகிய திரு. கிருஷ்ணசாமி, ராஜன், சுப்பிர மணியம் ஆகிய சகோதரர்கள் என்னை அதில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதச் சொன்னார்கள். அப்போதும் இன்று உள்ள விக்கிரமன்'தான் ஆசிரியர் போலும். 'அமுதசுரபி' பலர் கை மாறிய நிலையிலும் அவர் தொடர்ந்து ஆசிரியராக உள்ளார். அதில் நான் சீவகன் வரலாற்றைத் தொடர்ந்து எழுதி வந்தேன். பின் அது தனி நூலாக அமைய, பல்கலைக்கழகமும் அதைப் பட்டவகுப்பிற்குப் பாடநூலாக அமைத்தது. அதில் வந்த தொகையினை அன்று நான் செய லாளனாக இருந்து தொடங்கிய செனாய் நகர் திரு.வி.க. உயர்நிலைப் பள்ளிக்கு நன்கொடையாக அளித்து விட்டேன். (இன்றும் அதன் ஆட்சிக்குழுவில் இடம் பெற்றுள்ளேன்). இவையன்றி, கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தாம் நடத்திய தென்றல் இதழில் கட்டுரைகள் எழுதச் சொன்னார்கள். தினசரி என்னும் நாளிதழை நடத்திய