பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் - 381 திரு. சொக்கலிங்கம் அவர்களும் தம் நாளிதழ் சிறப்பு மலர் களுக்குக் கட்டுரை எழுதச் சொல்வார்கள். அப்படியே நான் மதுரையில் இருந்தபோது கருமுத்துக் குடும்பத்தார் நடத்திய 'தமிழ்நாடு’ நாளிதழிலும் என் எழுத்து வரவேண்டும் எனப் பணித்தார்கள். அவரவர்கள் விருப்பப்படி அவ்வப்போது சிற் சில கட்டுரைகளை எழுதி வந்தேன். திரு. கவிஞர் கண்ண தாசன் அவர்கள் வீட்டிற்கு வந்த கட்டுரைகளை வாங்கிச் செல்வதோடு, அவர்தம் பிறந்தநாள் விழாக்களிலும் பங்கு கொள்ளச் சொல்வார்கள். இவையன்றி வேறுசில இதழ்களுக்கும் கட்டுரை எழுதி னேன். இலண்டன், இலங்கை, மலேயா நாடுகளில் வெளி யான பத்திரிகைகள், இதழ்கள் ஆகியவற்றிலும் என் கட்டுரைகள் இடம் பெற்றன. வடநாட்டுத் தமிழ்ச்சங்க மலர் களிலும் சில இடம் பெற்றன. சில சிறப்பு மலர்களுக்கும் என் கட்டுரைகள் வேண்ட அனுப்பப் பெற்றன. வானொலியில் சிறக்கப் பணியாற்றிய திரு. அகிலன் அவர்கள் அடிக்கடி என் பேச்சினை வானொலி வழி ஒலிபரப்ப ஏற்பாடு செய்தார்கள். ஒன்றிரண்டு அவர்தம் மலர்களில் வந்தன என எண்ணு கிறேன். இவ்வாறு பல வகையில் என் பத்திரிகைப்பணி, கல்லூரிப் பணிக்கு ஒரு சிறிதும் இடையூறு நேரா வண்ணம் நன்கு நடைபெற்றது. அவ்வாறு இதழ்களில் வந்த கட்டுரை களில் பலவற்றைத் தொகுத்துப் பிறகு நூல்களாகவும் வெளி யிட்டேன். 'கொய்த மலர்கள்', 'எல்லோரும் வாழவேண்டும்’ 'நாலும் இரண்டும்', 'வானொலி வழியே சிறுவர்களுக்கு' என்பன போன்றவை நூல்களாக வெளிவந்தன. என் பம்பாய், கல்கத்தா பேச்சுக்களும், மதுரையில் வாழ்ந்தபோது பேசிய, எழுதிய எழுத்துக்களும், பேச்சுக்களும் நூல் வடிவங்கள் பெற்றதை முன்பே குறிப்பிட்டுள்ளேன். இவ்வாறு என் பொதுப்பணி எழுத்துப்பணி ஓரளவு மக்கள் நலம்பெறு வகையில் நடைபெற்றது. - -