பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கல்விப் பணிகள் பச்சையப்பரில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, ஆசிரியராக இருந்து மாணவர்களுக்குப் பாடம் சொல்லியும் பண்பை உணர்த்தியும் வழிகாட்டிக் கொண்டிருந்த ஆண்டு களில் வேறு வகையில் பொதுமக்கள் நலம்கருதி, கல்விப்பணி கள் சிலவும் மேற்கொள்ள வேண்டிய நிலை உண்டாயிற்று. அவற்றுள் முக்கியமானவை வாலாஜாபாத் உயர்நிலைப் பள்ளி அமைப்பு, செனாய்நகர் திரு.வி.க. பள்ளி தொடக்கம், அன்னை வள்ளியம்மாள் கல்விஅற வளர்ச்சி என்ற மூன்றும் முக்கியமானவை. இளமையில் வாலாஜாபாத்தில் இந்து மத பாடசாலை யில் எட்டாம் வகுப்பு வரையில் பயின்ற நான் (1928) பின் மேலே தொடர அஞ்சினேன்; அன்னையும் இசையவில்லை என்பதை இந்நூலின் முதற்பகுதியில் குறித்துள்ளேன். அப்போது ஏன் இவ்வூரில் ஒர் உயர்நிலைப் பள்ளி இருக்கக் கூடாது என எண்ணினேன், பின்பு அதே பள்ளியில் ஒராண்டு (1934-35) பணி புரிந்தபோதும் அப்பா மாசிலாமணி முதலியார் அவர்களிடம் உயர்நிலைப்பள்ளி தொடங்க வற்புறுத்தினேன். ஆனால் அவர்கள் ஏனோ அதில் ஆர்வம் காட்டவில்லை. அடுத்து முயன்றாலும் ஆகுநாளன்றி எடுத்த கருமங்கள் ஆகா என்ற ஒளவை வாக்கை எண்ணி அமைதி பெற்றேன். ஆகுநாள் வந்தது. செயலாற்றத் தொடங்கினேன். 1944இல் நான் சென்னையில் பணியேற்றேன். அதற்கு முன் காஞ்சிபுரம் பள்ளியினை விட்ட காலை, என் நூல்கள் பிற பொருள்கள் அனைத்தையும் இந்துமத பாடசாலை யிலேயே இட்டு, கலந்து, நானும் பெரும்பாலும் அங்கேயே விடுதியில் தங்கினேன். அப்போது நான் வாங்கிய புளியம் பாக்கம் மூன்று ஏக்கர் நிலத்தில் பள்ளி தொடங்கவும் அதை