பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 383 விரிவாக்கவும் திட்டமிட்டேன். பக்கத்தில் உள்ளவர் தம் மூன்று ஏக்கர் வெற்றிடத்தைக் கொடுக்க மயங்கினர்-அன்றி மறுத்தனர். அவர்கள் தந்திருந்தால், அதற்கு அடுத்திருந்த அரசாங்க நிலமாகிய ஆறு ஏக்கரையும் எளிதில் பெற்று, பன்னிரண்டு ஏக்கரில் பல பணிகள்-பள்ளி-தொழிற்கூடம், கலைக்கூடம் போன்றவை தொடங்கப் பெற்றிருக்கும். ஆயினும் இடையில் உள்ளவர்கள் இசையாமையால் என் எண்ணத்தைக் கைவிட நேர்ந்தது. ஒருவேளை அவர்கள் தந்து, என் பணியை அங்கே தொடங்கி இருந்திருப்பேனாயின் எனக்குச் சென்னை வாழ்வே வந்திருக்காது. அண்ணாநகரில் அன்னையின் பெயரால் பள்ளி கல்லூரிகள் தோன்றியிரா, பச்சையப்பரில் வாழ்ந்த பசுமையான வாழ்வும் அதன் வழியே பெற்ற பலருடைய நட்பும் பிறவும் சேர்ந்திருக்கா. புளியம் பாக்கத்தில் எண்ணம் பொசுங்கிய அதே வேளையில் பச்சை யப்பரில் வந்து சேருமாறு ஆணையிட 1944இல் சென்னை வந்து சேர்ந்தேன். அப்போது வாலாஜாபாத் ஊர்மன்றத் தலைவராக திரு. தேவராசன் என்பவர் இருந்தார். அவர் இந்துமத பாடசாலையில் என்னுடன் பயின்றவர். முயற்சியால் செல் வரானதோடு, ஊர் மன்றத்தலைவராகவும் சிறக்கப் பணி யாற்றினார். அவர் சென்னையிலேயே பிற வணிக வழிச் செய லாற்றி இங்கே பல நாட்கள் தங்குவார். அவரிடம் அடிக்கடி சென்று நம் ஊரில் உங்கள் நாளில் ஒர் உயர்நிலைப் பள்ளி அமைக்க முயலுங்கள் என வற்புறுத்துவேன். எனக்கும் அவருக்கும் நெருங்கிய நண்பராகிய பேரறிஞர் அண்ணா அவர்களும் என் வேண்டுகோள் முறையானதே என்று கூறி அவரை நெறிப்படுத்தினார். தாமும் அப்பணிக்கு உதவுவ தாகக் கூறினார். அப்படியே வாலாஜாபாத்தில் இரு நாடகங் கள் தாமே நடித்து அதன் வசூல் முழுவதையும் பள்ளி