பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 385 எல்லையை அடுத்துப் பெருநிலப் பரப்பு இருந்தது. அதை எங்களுக்குத் தந்து உதவுமாறு அவரை வேண்டினோம். மக்கள் நலம் போற்றும் அந்நல்லமைச்சர் உடனே அன்று மாவட்ட ஆட்சியராக இருந்த திரு. வேங்கடேஸ்வரனை அழைத்து அந்த ஆறு ஏக்கரை எங்கள் பள்ளிக் குழுவிடம் ஒப்படைக்குமாறு கூறினர். மாவட்ட ஆட்சியரும் நல்ல உளமுடையவர். உடனே செயல்பட்டார். நிலம் எங்கள் கைக்கு வந்தது. திரு. தேவராசன் தன் பொறுப்பிலும் பஞ்சா யத்தின் பொறுப்பிலும் சில ஆயிரங்கள் தந்தார். (அந்தக் காலத்தில் ஆயிரம் என்பது பெருந்தொகையாகும்). நானும் அப்போது பத்தாம் வகுப்புப் பாடநூலாக அமைந்த ‘கடவுளர் போற்றும் தெய்வம் கண்ணகி என்ற நூல் வருவா யினை முற்றும் அதற்குத் தந்தேன். உறுப்பினர் பலரும் உதவினர். குறைவை அண்ணாவின் நாடகங்கள் நிறைவு செய்தன. எனவே உரிய தொகையும் உற்ற இடமும் கிடைத் தமையின் திரு. புருடோத்தமரை அணுகினோம். அவர்களும் உடன் ஆவன செய்து 1947இல் பள்ளியினைத் தொடங்க முயற்சி செய்தார். அவ்வாண்டில் ஒரு நல்ல நாளில் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்கள் தலைமையில் அண்ணா அவர்தம் வாழ்த்துரையுடனும் பல நல்லவர் தம் முன்னிலை யிலும் வாலாஜாபாத் உயர்நிலைப்பள்ளி தொடங்கப் பெற்றது. (இன்று ஆடவருக்கு இரண்டும் மகளிர்க்கு ஒன்றும் என மூன்று பள்ளிகள் அங்கு உள்ளன) பின், கட்டடத்துக்குக் கால்கோள் விழா, கட்டடத் திறப்பு விழா முதலியன சிறப்பாக நடைபெற்றன. அவற்றுள் ஒன்றில் அன்றைய தமிழக முதல்வராக இருந்த மாண்புமிகு குமாரசாமி ராஜா அவர்கள் தலைமையேற்றுக் கலந்து கொண்டார்கள். எல்லா விழாக்களிலும் மாண்புமிகு பக்தவத்சலம் அவர்களும் பேரறிஞர் அண்ணா அவர்களும் தவறாமல் கலந்து கொள் ஆ-25 -