பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 389 தக்க இடமும் இங்கே இல்லை. இதை உணர்ந்த திரு. மீரான் அவர்கள் அந்த குடிசைவாழ் மக்களுக்கென மாற்றுஇடம் வேறு எங்கேயோ ஒதுக்கித் தந்து அவர்களை உடனே காலி செய்யுமாறு ஆணையும் பிறப்பித்தார். நாங்களும் அவர்கள் பிரித்து எடுத்துச் செல்வதற்கென ஒவ்வொருவருக்கும் செல வாகும் தொகையினைக் (சுமார் 150 என நினைக்கிறேன்) கொடுத்தோம். ஒரே ஒரு நாளில் எல்லாக்குடிசைகளும் பிரித்து எடுத்து மாற்றப் பெற்றன. ஆயினும் எப்படியோ அன்று நின்ற மூன்று குடிசைகள் அப்படியே உள்ளதோடு, அதைச் சார்ந்து இன்னும் சில குடிசைகளும் பின்பு உருவாயின. பிறகு, நானும் பல காரணங்களால் செயலர் பணியினை விட்டு வெறும் உறுப்பினனாக மட்டும் இருந்தேன், இருந்து வருகிறேன். பள்ளி வளரத் திரு. மீரான் அவர்கள் செய்த உதவி பெரிதும் போற்றுதற்குரியது. பள்ளிக்குப் பெயர் வைக்க நினைத்தபோது திரு. வி. க.” பெயர்தான் வந்தது. குழுவில் டாக்டர், மு. வ. அவர்களும் நானும் திரு. வி. க. அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள். அப்போதுதான் அவர்கள் மறைந்து விட்டார்கள். எனவே அவர் பெயரால் ஒரு நிலைத்த நினைவுச் சின்னம் எழுப்ப நினைத்தோம். அதற்கென அவர் பெயரால் முன் வசூல் செய்த தொகையே (சிறிதாயினும்) முதல் தொகையாக அமைந்தது. எங்கள் விருப்பத்தை டாக்டர். சுந்தரவதனம் அவர்களும் பிற உறுப்பினர்களும் ஏற்றுக் கொண்டனர். எனவே திரு. வி. க. பள்ளி 1955இல் உருவாயிற்று. நான் என் கல்லூரி வேலைகட்கு இடையே மிக உழன்று இப்பள்ளியினை உருவாக்கப் பாடுபட்டேன். திரு. நந்தகோபால் அவர்களும் உடனிருந்து உழைத்தார். மேலும் அவர் தந்தையாரும் எங்கள் உழைப்பிற்கு முழு உதவி அளித்து ஆதரித்தனர். அரசாங்க இசைவும் பெற்றோம். பலர் நன்கொடை அளிக்க முன் வந்தனர். ஒரு சிலர் தம் பெயரால் வகுப்பறைகள்