பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 - ஆனந்த முதல் ஆனந்த வரை கூரை வேய்ந்து கட்டித் தந்தனர். அப்போது முதன் முதல் ஆறாம் வகுப்பைத் தொடங்க ஏற்பாடு செய்தோம். அதில் முதல் மாணவனாக என் மகன் மெய்கண்டானைச் சேர்த்தேன். பிறகு கீழ் வகுப்புகள் அமைந்தன. மேல் வகுப்புகள் ஒவ்வொன்றாய் வளர்ந்தன. மேடுபள்ளமாக இருந்த நிலப்பரப்பினைச் செப்பனிட அரசாங்க விவசாயத்துறையினர் பெரிதும் உதவினர். திரு. நந்தகோபால் அவர்தம் தமையனார் இராதாகிருஷ்ணன் என்பவர் அத்துறையின் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவர்தம் உதவி அதற்குத் துணைபோயது. திரு. பக்தவத்சலம் அவர்களும் பொதுப்பணித்துறை வழி உதவினார். திரு. மீரான் அவர்களும் மாநகராட்சி வழியே நலம் பல புரிந்தனர். இவ்வாறு 1955இல் சிறிய அளவில் திரு. வி.க. பள்ளி தொடங்கப் பெற்றது. திறப்பு விழாவினைச் சிறப்புற நடத்தத் திட்ட மிட்டோம். மாண்புமிகு திரு. காமராசர், திரு. பக்தவத்சலம், திரு. சுப்பிரமணியம் ஆகிய மூவரும் திறப்பு விழாவிற்குத் தலைமையேற்றும் பள்ளியினைத் தொடங்கியும் படத் திறப்பினைச் செய்தும் எங்களை வாழ்த்தினர். அன்று அவர்கள் நட்ட வேப்ப மரங்கள் இன்று வளர்ந்து நல்ல நிழலிட்டு, பள்ளி முன்பு அழகுடன் பசுமையாக விளங்கு கின்றன. அத்திறப்பு விழா பெருவிழாவாக அமைந்தது. செனாய்நகர் வாசிகளுக்கு அது ஒரு கிளர்ச்சி விழாவாகவே அமைந்தது. டாக்டர். சுந்தரவதனம் அவர்கள் அவ்வப்போது தேவையான பொருள் உதவியினைச் செய்ததை நினைவு கூர்தல் வேண்டும். அவர்தம் உறவினர் ஒருவர் வீட்டைப் (சென்னை தங்கசாலையில் உள்ளது) பள்ளிக்கு எழுதி வைக்க உதவினர். டாக்டர் மு. வ. அவர்கள் தம் நூல்கள் சில வற்றின் வருவாயினைப் பள்ளிக்கு என எழுதி வைத்தார்.