பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில்

நானும் அப்போது புகுமுக வகுப்பிற்குப் பாடமாயமைந்த என் நூலின் வருவாயினைப் பள்ளிக்குத் தந்தேன். இன்னும் வெளியே உள்ள பல அன்பர்கள் பெரும் பொருள் தந்து உதவினர். எனவே அடுத்த ஆண்டே எட்டு வகுப்பு அறைகள் கொண்ட ஒரு கட்டடத்தைத் தொடங்கினேன். தெருப் பக்க எல்லையினை முள்வேலியிட்டு அமைத்தோம். கட்டடம் விரைந்து வளர்ந்தது. அடுத்த ஆண்டே அரசாங்கம் ஆய்வுக்களம் அமைக்க உதவிய தொகையினைக் கொண்டு, பக்கத்திலேயே மற்றொரு கட்டடமும் உருவாயிற்று. இரண்டினையும் திரு. நந்தகோபாலும் நானும் பொறுப்புடன் நாள்தோறும் சென்று பார்த்து வந்தமையால் அதிகச் செலவு இல்லாமலேயே கட்டடங்கள் அமைந்தன. எங்கள் வகுப்பறை களுக்கு அரசாங்க மானியமும் கிடைத்தது. இடையில் இந்த எல்லையில் செங்கல் வாணிபம் செய்து தழைத்த நல்லவர் குருசாமி நாயுடு அவர்கள் அமைந்தகரையில் நெடுஞ்சாலைக்கு அருகே அவர் கட்டியிருந்த, பத்துக் குடியிருப்புகள் அமைந்த ஒரு கட்டடத்தையும் நிலத்தினையும் இனாமாகப் பள்ளிக்கு எழுதித் தந்தார். பின் அவர்கள் பள்ளிக் குழுவில் இடம் பெற்றும் உதவி செய்தார். பின் 1958இல் என் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. என் வாழ்க்கைத் துணைவியார் நோய்வாய்ப்பட்டு மறைந்த காரணத்தால், கல்லூரிக்கும் தொடர்ந்து விடுமுறை பெற்ற தோடு, இப்பள்ளியின் செயலர் பதவியினையும் வேண்டா மென விட்டுவிட்டேன். இடமாற்றம் கருதி அக்காலத்தில் தான் ஒராண்டு, நான் மதுரை சென்றிருந்தேன். எனினும் இன்றுவரை அந்த ஆட்சிக் குழுவின் உறுப்பினனாக இருந்து வருகிறேன். . பள்ளி வளர வளர, ஒரு மாற்றம் அமைத்தோம். பெரும் பொருள் உதவி செய்த டாக்டர். சுந்தரவதனம் அவர்களைப்