பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் . . 393 சென்னைப் பல்கலைக்கழகத்தே அறிஞர் குழுவில் தொடர்ந்து ஒன்பது ஆண்டுகள் ஆளுநர் நியமனத்தின் அடிப் படையில் பணிபுரிந்தேன். நான் ஒருமுறை (1938இல்) மாவட்டக் குழுவிற்குத் தேர்வில் நின்று வெற்றி பெற்ற அன்றே வேறு எதற்கும் போட்டியிடுவதில்லை என முடிவு செய்திருந்ததை இந்த நூலின் முற்பகுதியிலேயே குறிப்பிட் டுள்ளேன். எனவே இதற்கும் கல்லூரி வழியே போட்டி இட்டு வெற்றி பெற்றிருக்கலாம். பல அன்பர்கள் அப்படியும் வற்புறுத்தினர். போட்டி இல்லாமலேயே செய்யலாம் எனவும் கூறினர். ஆனால் நான் அவற்றை ஏற்றுக் கொள்ள வில்லை; வேறு வாக்களிக்கும் எந்தப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இந்த அறிஞர் குழுவில், ஆளுநர் நியமன மானமையின் ஏற்றுக் கொண்டு ஒன்பது ஆண்டுகள் பணி புரிந்தேன். அப்பொழுதுதான் தமிழ், இரண்டாம் பகுதி நிலையிலிருந்து முதல் பகுதிக்கு (Part I) மாற்றப் பெற்றது. அப்போது நான் தமிழுக்குப் பல்கலைக்கழகப் பாடநூற்குழுத் தலைவனாகவும் இருந்தேன். ஆங்கிலப் பாடநூற் குழுவின் தலைவராகக் கோவை பு. சா. கோ. (P.S.G.) கலைக்கல்லூரி முதல்வர் திரு. B. R. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இருந்தார்கள். இந்தப் பகுதி (மாற்றத்திற்கு அவர்களும் உதவினார்கள். டாக்டர் முதலியார் அவர்கள் துணைவேந்தராக இருந்தனர் அவர்கள் அந்த மாற்றத்தைக் கொண்டு வரமுயன்றபோது, எத்தனை பேர்-தமிழர்களே-எதிர்த்தனர் என எண்ணி வருந்தினேன். இந்த மாற்றத்தின் நோக்கம் தமிழ், தமிழ் நாட்டில் கட்டாயமாக்கப் பெற வேண்டும் என்பதே. ஆயினும் அப்போது அந்த எண்ணத்தை அத்தீர்மானத்தில் புகுத்தவில்லை. காலம் பதில் சொல்லும் என விட்டு விட்டோம் (இன்னும் பதில் சொல்லவில்லை). ஆனால் அதற்கே பச்சைத் தமிழர் எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் சில ஆங்கிலப் பேராசிரியர்கள்கூட எதிர்ப்புத் தெரிவித்தனர்