பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394 ஆனந்த முதல் ஆனந்த வரை அதே வேளையில் சீனிவாசராகவன் போன்ற ஆங்கிலப் பேராசிரியர்கள் ஆதரவு தந்தனர். இச்சிக்கலைத் தீர்க்க என்னையும் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்களையும் துணை வேந்தர் அவர்கள் வரவழைத்துப் பேசினர். ஒருமணி நேரம் பேசி முடிவு செய்தே அறிஞர் குழுவில் அவர்கள் தீர்மானம் இடம் பெற்றது. (அப்பொழுது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தார்கள்). இரண்டொரு நாள் கழித்து, அவரிடம் இதுபற்றிச் சொன்னபோது, தமிழின் நிலையினையும் தமிழரின் போக்கினையும் எண்ணி வருந்தி னார்கள். இன்று வரையில் தமிழ் முதல் பகுதியாக-தேர்வி லும் முதலிடம் பெற்று விளங்குகிறதே ஒழிய-ஆங்கில முதல் மொழியாக இருந்த நிலையினைப் பெறவில்லை. தமிழ் பிரஞ்சு, லத்தின், இந்தி, உருது போன்ற பல மொழிகளோடுபதினான்கு மொழிகளோடு ஒரு மொழியாகவே உள்ளது. ஆங்கிலம் இரண்டாம் பகுதியான நிலையிலும் அது கட்டாய மாக எல்லாரும் பயிலும் மொழியாக உள்ளது. பள்ளிகளிலும் அப்படியே (இதுபற்றி வேறு இடத்தில் எழுதியுள்ளேன்). இவ்வாறு பல்கலைக்கழகத்தே கல்வித்துறையில் ஒரளவு கலந்து பணியாற்றினேன். அத்துடன் பாடநூற்குழு, அகராதிக்குழு, சொற்பொழிவாளர் தேர்வுக் குழு போன்ற வற்றிலும் உறுப்பினனாகவும் தலைவனாகவும் இருந்து பணி யாற்றியுள்ளேன். இவ்வாறே அண்ணாமலை, மதுரை, உஸ்மானியா, தில்லி, பஞ்சாப், காசி பல்கலைக் கழகங் களிலும் பல குழுக்களில் உறுப்பினனாக இருந்து செயலாற்றி வந்துள்ளேன். தமிழ்நாட்டு மூன்று பல்கலைக்கழகங்களிலும் நினைவுச் சொற்பொழிவுகள் ஆற்றி அவற்றைத் தனி நூல்களாகவும் வெளியிட்டுள்ளேன். பச்சையப்பரில் இருந்தபோதுதான் பல நூல்களை நான் எழுத முடிந்தது. ஒருசிலவற்றிற்கு மத்திய