பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 395 அரசும் மாநில அரசும் பரிசுகள் வழங்கியுள்ளன. தமிழ்நாடு மட்டுமன்றிப் பிற மாநிலங்களிலும் இந்தியா மட்டுமன்றி உலகில் அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து உட்பட பல நாடு களிலும் தமிழர்தம் மொழி, பண்பாடு, சமயம், கலை ஆகியவை பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றி அவற்றை நூல் களாகவும் அச்சிட்டுள்ளேன். மலேயா சொற்பொழிவுகள், மணிபல்லவம், கங்கைக்கரையில் காவிரித் தமிழ், வையைத் தமிழ், வெள்ளிவிழாச் சொற்பொழிவுகள் போன்ற நூல்கள் சில. இவ்வாறு ஒல்லும் வழியான் செல்லும் வாயெல்லாம் சென்று, நின்று, என்னால் கூடிய கல்விப் பணியினையும் அதனோடு கலந்த தமிழ்ப் பணியினையும் செய்து வந்த காலம் அது. ஆயினும் இவற்றிலெல்லாம் எந்த வகையிலும் என் கல்லூரிப் பணிக்கு இடையூறு வராமல் பார்த்துக் கொள்வேன். இத்தகைய பணிகளுக்கிடையில் பச்சையப்பரில் முப்பது ஆண்டுகள் உருண் டோடிவிட்டன. 8. பிறபணிகள் பச்சையப்பர் கல்லூரியில் நான் முப்பது ஆண்டுகள் பணியாற்றியபோது நடந்த நிகழ்ச்சிகள் பல. கல்லூரியிலும் வெளியிலும் நான் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் எண்ணற்றன. அவற்றுள் ஒருசிலவற்றை முன்னரே தொகுத்துக் காட்டியுள்ளேன். வேறு சிலவற்றை இங்கே கூறலாம் என எண்ணுகின்றேன். - தொடக்கத்தில் பல சமய மாநாடுகளில் பங்கு கொண் டேன். சைவ சித்தாந்த சமரசத்தின் ஆண்டு விழாக்களில் தவறாமல் கலந்து கொள்வேன். அவற்றுள் சிவகாசி மாநாட்டு இளைஞர் மாநாட்டில் தலைமையேற்றேன். ஆயினும் திரு. ம. பாலசுப்பிரமணிய முதலியார் அவர்கள் மறைவுக்குப்பின்