பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 ஆனந்த முதல் ஆனந்த வர்ை சமாசம் சற்றே நிலையில் தளர்ந்தமையின், சரியாக நடை பெறவில்லை. என்னுடைய தொடர்பும் அருகிவிட்டது. எனினும் சமயச் சொற்பொழிவுகள் தொடர்ந்து மேற் கொண்டேன். திருச்செந்தூர் வைகாசி விழாவின்போது நடைபெறும் சொற்பொழிவுகளில் என் பங்கு உண்டு. அப்படியே காஞ்சி ஏகாம்பரநாதர் விழாச் சொற்பொழிவு களிலும் நான் கலந்து கொள்வேன். மயிலை கபாலி திருக்கோயில் விழாச் சொற்பொழிவுகள், கந்தகோட்ட விழாச் சொற்பொழிவுகள் எனச் சென்னையிலேயும் என் பணிகள் நடைபெற்றன. என் ஆய்வுப்பட்டம் தேவாரம் பற்றியது ஆதலால் பலரும் தேவாரம் பற்றிப் பேச விரும்புவர். நானும் தேவாரத்தில் உள்ள பல கருத்துகளை இக்கால அறிவியல் கருத்துகளோடு பொருத்திக் காட்டியும், மூவரும் மணிவாசகர் சேக்கிழார் போன்றாரும் எழுதியவற்றில் உள்ள கருத்துகளை யும் எளிய வகையில் எடுத்துக் காட்டுவேன். . எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டு குறித்து மேலே செல்ல லாம் என எண்ணுகிறேன். குழந்தை கருவில் வளரும் நிலை யினை அப்பர் அடிகள், 'கருவாகிக் குழம்பிருந்து கலித்து மூளை கருகரம்பும் வெள்ளலும்பும் சேர்ந்து ஒன்றாகி உருவாகிப் புறப்பட்டுஇங்கு ஒருத்தி தன்னால் வளர்க்கப் பட்டு' என்று நன்கு விளக்குகின்றார். இதில் முக்கியமானது கரு நரம்பும் வெள்ளெலும்பும் சேர்ந்து' என்ற தொடர். முதலில் உண்டானது நரம்பா-எலும்பா என்பதை அறிவியல் துறையினர் சென்ற நூற்றாண்டின் இறுதியில்தான் ஆய்ந்து கண்டு முடிவெடுத்தனர், முதலில் நரம்பும் பின் எலும்பும் உண்டாயின என்று. இந்த உண்மையினை அப்பர் கி.பி. ஏழாம் நூற்றாண்டிலேயே சொல்லிய சிறப்பு போற்றக்கூடிய