பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 397 தன்றோ! அப்படியே அப்பர் மின்னி இடித்தவன் காண்” என்று மின்னலின்றி இடியில்லை என்ற இன்றைய விஞ்ஞானி கள் கண்டுபிடித்த உண்மையினை அன்றே காட்டிவிட்டார். மற்றும் சமுதாய வாழ்வு, பயிர் வளத்தால்-பயிர் நீர் வளத்தால் அமைவது என்ற உண்மையினைக் குறிப்பாக இறைவன் மேல் ஏற்றி ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய் என்கின்றார். அப்படியே சுந்தரர் 'உண்பது நாழி உடுப்பது நான்கு முழம் என்ற இவை போதும் என்ற மன நிறைவு ஏற்படின் நாட்டில் எந்தவித மாறுபாடும் இராது என்பதையும் அப்போது இறைவனை ஏத்தி வரும் இடர் எதுவாயினும் களையலாம் என்றும் விளக்கு முகத்தான் 'இம்மையேதரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர்க் கெடலுமாம்” என்கின்றார். இவ்வாறு பலப்பல உண்மைகளை விளக்கு முகத்தானே என் சமயச் சொற்பொழிவுகிள் அமையும். பெரு மாநாடுகள் மட்டுமன்றி, சிறுசிறு கிராமங்களுக்கும் கூடச் சமயச் சொற்பொழிவு, கூட்டுறவு பற்றிய சொற் பொழிவு, சமுதாய வளர்ச்சி பற்றிய சொற்பொழிவுகள் ஆகியவற்றில் பங்கு கொண்டுள்ளேன். அப்படியே சென்னை நகரிலும் தமிழ் நாட்டுப் பிற இடங்களிலும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றிலும் சென்று நான் பேசியது உண்டு. சிறுசிறு கிராமங்களிலும் சங்கங்கள் அமைக்கவும், அவற்றின் வழியே சமுதாய இணை ப்பு, ஒன்றிய வாழ்வு இவைபற்றி விளக்கவும் பலவகை வழிகளில் ஊர்தொறும் சென்று. உதவியதும் உண்டு. அப்படியே நான் வழிபடும் தெய்வ மாகிய தணிகை முருகனை ஆண்டின் முதல் நாளில் சென்று பாட்டிசைத்துப் பரவி வருவதும் உண்டு. அவற்றுள் ஒருசில நூல்களாகவும் வெளிவந்தன. பின் அப் புத் தாண்டு வழிபாடு, வெறும் ஆரவார நிலையை எய்தியதால், அந்த முறையினை