பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 399 பல்கலைக் கழகங்களிலும் பலப்பல அமைப்புக்களில் உறுப் பினனாகவும் இருந்து, ஒல்லும் வகையில் உற்ற பணிகள் பல புரிந்துள்ளேன். கல்லூரியிலே பாடம் சொல்லித் தருவதைத் தவிர்த்து, மன்றங்கள் வழியே மாணவர்களைப் பேசப்பழகும் வாய்ப் பினை அளிப்பதும் உண்டு. இந்தமுறை எல்லாக் கல்லூரி களிலும் இன்றும் நடைபெறுகின்ற நிகழ்ச்சிதான். என்றாலும் கல்லூரி மாணவர் மன்றம், தமிழ் மன்றம் ஆகிய வற்றிற்கு நடக்கும் தேர்தல், பச்சையப்பரில் முக்கியமான தாக அமையும். வெளியே உள்ள அரசியல் போராட்டங் களைப் போன்று, கல்லூரியிலும் போராட்டங்கள் நடை பெறும். சில அரசியல் கட்சிகள் மறைமுகப் பொருள் கொடுத்தும் பிறவகையில் தலையிட்டும் விளையாடுவதுண்டு. பச்சையப்பர் கல்லூரி அந்நாளில் தமிழுக்குத் தலையாய இட்ம் எனப் பெயர் பெற்றது. பச்சையப்பன் கல்லூரிப் படிக்கட்டும் பைந்தமிழ் பாடும் என்ற பழமொழியே வழக் கத்தில் இருந்தது. எனவே தமிழில் மாணவர் ஆர்வம் காட்டி இருப்பர் என்பது புலனாகும். அதன்வழியே இங்கே பயின்று பயிற்சிபெற்ற அன்றைய மாணவருள் சிலர் இன்று அரசியலில் சிறந்த பேச்சாளராகவும் செயலாளராகவும் உள்ளனர். இங்கே எல்லாக் கட்சிகளுக்கும் இடம் இருக்கும். அப்போது திராவிடகழகத்தில் இத்தனைப் பிரிவுகள் இல்லை. பெரியாரும் அண்ணாவும் ஒன்றாக இணைந்து பணியாற்றிய நிலையிலும் இருவரும் பின்பிரிந்த நிலையிலும் இருவருமே கல்லூரிக்குப் பெரும்பாலும் ஆண்டுக்கு ஒருமுறை தவறாது. வந்து பேசுவர். அப்படியே ராஜாஜி போன்ற அன்றைய காங்கிரஸ் தலைவர்களையும் அழைப்பர். சுருங்கக் கூறின், பச்சையப்பர் கல்லூரி மற்றொரு தமிழ் நாட்டுச் சட்டமன்றம் போன்று செயலாற்றிற்று எனலாம்.