பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஆனந்த முதல் ஆனந்த வரை பிறந்த பெரியப்பா வீட்டில் நான் ஒரு நாளாவது சாப்பிட்டதோ சிற்றுண்டி கொண்டதோ கிடையாது. இத்தனைக்கும் அவர்கள் நான் வாழ்ந்த அதே ஊரில்தான் இருந்தார்கள். அவர்கள் எனக்குச் சாப்பாடு போடாவிட் டாலும், வசைமொழி வாரி வழங்கியதை அறிவேன். எத்தனையோ நாள் என்னையும் என் அன்னையையும். பெரியப்பாவும் அவர்தம் பிள்ளைகளும் வசைமொழியால் வாழ்த்தியது நினைவிருக்கின்றது. என் தந்தையார் அவர்கள் குடும்பத்தை விட்டுப் பிரிந்து வந்து விட்டமை யாலும் அவர் குடும்பப் பொறுப்பை நன்கு கவனிக்காமை யினாலும் அவர் உடன் பிறந்தவர்களோடு அதிகமாகக் கலந்து வாழவில்லை என்னலாம். என் அப்பாவுடன் பிறந்த அத்தை ஒருவர் பதினைந்து கல்தொலைவுக்கு அப்பால் வாழ்ந்து வந்தார். நான் எப்போதாவது அங்கே செல்வேன். இரண்டொருநாள் தங்குவேன்; அவர்கள் வந்து ஓரிரு வேளை தங்கிச் செல்வார்கள்; அவ்வளவுதான். அவர்களோடு நான் அதிகமாகப் பழகியது கிடையாது. அப்பாவுடன் பிறந்தவர்கள் நிலை இதுவாக அம்மா வுடன் பிறந்த பெரியம்மா தனியாகப் பிரிந்து விட்டனர் என மேலே கூறினேன். இருவரும் பக்கத்துப் பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தார்கள் என்றாலும் பேசுவதுகூடக் கிடை யாது. இரண்டு வீட்டுக்கும் இடையில் செல்லுவதற்காக ஒரு வாயிற்படி வழி இருந்தது. இருவரும் அதை அடைத்துப் பூட்டிவிட்டு, இரண்டு பக்கங்களிலும் பழம் பானைகளையும் மரங்களையும் அடுக்கி வைத்து, யாரும் திறக்க முடியாத வகை யில் மூடிவிட்டார்கள். வாயிற்கதவு மட்டும் மூடப்பெற வில்லை; அவர்கள் உள்ளங்களும்கூட மூடப்பட்டன என்ன லாம். உடன் பிறந்த சகோதரிகள் இருவர் இப்படிப் பொருளால் வேறுபட்டார்கள் என்பதை இன்று நினைத்தால்