பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பச்சையப்பரில் 401 களை அழைத்துப் பேச வைப்போம். பல்வேறு முறைகள் ஆராயப் பெறும். ஒருமுறை மகாவித்துவான் வேணு கோபாலப்பிள்ளை அவர்கள் வந்தார்கள். இலக்கணத்தில் அவர்கள் சிறந்த புலமைபெற்றவர்கள். பல சொற்களைப் பற்றி ஆராய்ச்சி நடைபெற்றது. நாள்கள் அல்லது நாட்கள் என்பது ஆராயப்பெற்றது. இன்று பலரும் 'பல நாட்கள்’ என்றுதான் எழுதுகின்றனர். நாட்கள்’ என்றால் அன்று தயாரித்த கள்’ என்றுதானே பொருள்படும். ‘நாள் என்பதன் பன்மை ஆகாதே என்ற வாதம் எழுந்தது. நீண்ட ஆய்வுக்குப்பின் இரண்டும் ஏற்றுக்கொள்ளப்பெற்றன. புதியன புகுதலும் பழையன கழிதலும், வழுவல காலவகை யினானே' என்ற நன்னூலின் புறநடைச் சூத்திரத்துக்கு ஏற்ப, நாட்கள் நன்கு பழக்கத்தில் உள்ளமையாலும் பொருளை நன்கு விளக்குகின்றமையாலும் அதையும் கொள்ள வேண்டும் என முடிவுசெய்யப்பெற்றது. இப்படியே நாள்தோறும் பல சொற்கள், பல பொருள்கள் பற்றி ஆய்வு நடைபெறும். தமிழ்ப் பாடங்களை நடத்தும் முறை பற்றியும் விவாதிப்பர். உரைநடை, செய்யுள், இலக்கணம் போன்ற வற்றை மாணவர் உளங்கொள எவ்வெவ்வாறு பயிற்ற வேண்டும்? எப்படி எப்படி அவர்கள் கட்டுரை, மொழி பெயர்ப்பு ஆகியவற்றைச் செய்ய வேண்டும் என்பன பற்றியும் கலந்தாய்வும் கருத்தரங்குகளும் நடைபெறும். மொத்தத்தில் தமிழைக் கல்லூரி மாணவர் விரும்பிக் கற்றுப் போற்றும் வகையில் அமைய வழிகாண அப்பயிற்சி வகுப்புகள் வழி செய்தன என்பது பொருந்தும். எனினும் ஏனோ அத்தகைய வகுப்புகளைத் தொடர்ந்து பல்கலைக்கழகங்கள் நடத்த வில்லை. தமிழ்நாட்டில் உள்ள எந்தப் பல்கலைக்கழகமும் அதை நடத்துவதாகத் தெரியவில்லை. நான் என்றுால் ஒன்றில் (கல்வி எனும் கண்) குறித்தபடி, கல்லூரி ஆசிரியர்களுக்கு, ஆ-26