பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

løveress 692 ஆனந்த முதல் ஆனந்த இஒர உயர்நிலை, மேனிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளழை போன்று ஓராண்டு ஆசிரியர் பயிற்சி தேவை என்பதை இன்னும் நாடும் அரசும் உணரவில்ல்ை என்று உணருமோ அன்றே கல்லூரிக் கல்வி செம்மையுறும். இதுமட்டுமன்று, இன்னும் இத்தகைய நல்ல பழக்கங்களை-பாடம் நடத்து இதிலும் தேர்வு நடத்துவதிலும் பல்கலைக் கழகங்கள் பின் புற்றுவதில்லை. பின் எவ்வாறு மாணவர்கள் சிறந்த வசையில் தேர்ச்சி பெறுவர்? அனைத்திந்தியத் தேர்வுகளில் அவர்கள் எங்கோ பின் தள்ளப் பெறுவதற்கு இது முக்கிய காரணமாக அன்றோ அமைகின்றது. நான் 1944இல் கல்லூரியில் சேர்ந்தபோது சாதாரணச் சொற்பொழிவாளனாகத்தான் சேர்ந்தேன். 1945இல் 'எம்.லிட் பட்டத்துக்கு என்னைப் பதிவு செய்யச் சொன்னார் கள். 1944இல் துறைத் தலைவராக இருந்த மோசூர் கந்தசாமி முதலியார் அவர்கள் ஒய்வு பெற்றபின் 1945இல் டாக்டர் மு. வரதராசனார் தலைவராகப் பொறுப்பேற்றார்கள். அவர்கள் சொற்படியும் பல்கலைக்கழகப் பேராசிரியர், என் ஆசிரியர் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை சொற்படியும் :எம்.லிட் பட்டத்துக்கு 1945இல் பதிவு செய்தேன். தேவாரத்தில் வரலாற்று ஆய்வு' என்பது அதன் தலைப்பு. 1947இல் அப்பட்டம் பெற்றபின் டாக்டர் பட்டத்துக்குப் பதிவு செய்து, பின் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை அவர்தம் அறிவுரைப்படி விட்டுவிட்டேன். (இது பற்றி முன்னரே குறித்துள்ளமையின் இங்கே அதிகம் எழுதத் தேவை இல்லை). நான் டாக்டர் பட்டம் பெறாவிட்டாலும் டாக்டர் பட்ட வகுப்பு:அமைப்பதற்கென்றே நான் ஐதராபாத் உஸ்மானியப் பல்கலைக் கழகத்துக்கு மாற்றப்பெற்றேன். என்னிடம் மூவர்;பதிவுசெய்தனர். ஆயினும் நான் ஒராண்டில் திரும்பி விட்டமையின் ஒருவரே விடாது முயன்று என் வழியே 'டாக்டர் பட்டம் பெற்றார். பின் அவர் அப்பல்கலைக்