பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 ஆனந்த முதல் ஆனந்த வரை. சேர்ந்த என்னை அனுப்ப அறநிலையம் விழைந்தது. ஆயினும் நான் திரும்பவும் அங்கே செல்ல விரும்ப்வில்லை. என் அன்னையர் இருவரை ஒரே ஆண்டில் பறிகொடுத்து வேகவதியில் இருக்கவைத்து. விடுதலை வேண்டிப் பின், சென்னை வந்த எனக்குக் காஞ்சிக்குத் திரும்பிச் செல்ல விருப்பமில்லை. என் விருப்பத்தை அறிந்த அறநிலையத்தார் என்னை விட்டு வேறு ஏற்பாடு செய்தனர். எனினும் அதன் தொடக்க விழாவிற்கும் கட்டடத் திறப்பு விழாவுக்கும் பிற விழாக்களுக்கும் நான் தவறாமல் செல்வேன். தொடக்க விழாச் பொற்பொழிவினை டாக்டர் ஆர்க்காடு இராமசாமி முதலியார் அவர்கள் ஆற்றித் தொடங்கிவைத்தனர். அவர்தம் ஆங்கிலச் சொற்பொழிவைப் பேரறிஞர் அண்ணா அவர்கள் மொழிபெயர்த்தனர். பின் கட்டடத்திறப்பு விழாச் சொற் பொழிவின்ை டாக்டர் ஆர்க்காடு இலட்சுமணசாமி முதலியார் அவர்கள் ஆற்றி, அக்கட்டட்த்தினைத் திறந்து வைத்தனர். அவர்தம் ஆங்கிலச் சொற்பொழிவை நான் மொழிபெயர்த்தேன். பின் அவர்தம் மகனார் டாக்டர் வேணுகோபால் அவர்கள் பச்சையப்பன் அற்நிலையத்தின் தலைவராக இருந்தபோது (1967) காஞ்சி மகளிர் கல்லூரி தொடங்கப் பெற்றது. அப்போதுதான் நான் ஐதராபாத்தி லிருந்து திரும்பி வந்து பச்சையப்பரில் சேர்ந்தேன். திரு டாக்டர் வேணுகோபால் அவர்கள், அந்தக் காஞ்சிக் கல்லூரிக்கு மட்டுமன்றி, சென்னையில் அமைந்த செல்லம்மாள் கல்லூரி, கந்தசாமி நாயுடு ஆடவர் கல்லூரி ஆகியவற்றிற்குத் தமிழ்த்துறை ஆசிரியர்களைத்தேர்ந்தெடுத்த போது என்னையும் உடன் வைத்தே என் பரிந்துரையின் பேரிலேயே அவர்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இவ்வாறு அறநிலைய உறுப்பினர், தலைவர் என்னிடம் நான் பணி யாற்றிய அந்த முப்பது ஆண்டுகளிலும் மிகுந்த அன்புடனேயே பழகினர். அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் பழமையான