பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4:06 ஆனந்த முதல் ஆண்ங்தி வரை அப்போது அந்நூல் நிலையத்தில் சென்னை நிலைய்ங்களில் இல்லாத பல நல்ல - தொன்மைவாய்ந்த-வரலாற்றுச் சிறப்புடைய பழைய நூல்கள் இருந்தன. அவற்றை அவர் பொன்னே போல் போற்றிப் பாதுகாத்துவந்தார். ஆனால் இன்று அவை அனைத்தும் உள்ளனவா என்பது தெரிய வில்லை. நூல் நிலையம் மட்டுமன்றி, மாணவர் கூட்டுறவுச் சங்கம், கல்லூரிச சிற்றுண்டிச்சாலை, விளையாட்டுக் கழகம் போனறவையும் சிற்சில் ஆண்டுகளில் என் பார்வையில் இருந்தன. நானும் என் பொறுப்பைத் தட்டிக் கழிக்காது, அவ்வப்போது அங்கங்கே சென்று, என்னால் ஆனவற்றைச் செய்து, அவை அவை செம்மையுறச் செயலாற்றிவந்தேன். துணைமுதல்வராக மூன்றாண்டுகள் பொறுப்பினை ஏற்ற போதும் எனககு ஒதுக்கிய பணிகளைக் குறையின்றிச் செய்து வந்தேன். எனக்கு முன்னரே துண்ைமுதல்வர் பதவியும் அதன்வழி முத்ல்வர் பதவியும் வந்தது பற்றியும், நான் வேண்டாம் என ஒதுக்கியது பற்றியும் முன்னரே குறிப்பிட் டுள்ளேன். நான் ஒய்வு பெற்றபின் மாலைக் கல்லூரியில் ஒராண்டு பணிபுரியப் பணித்தார்கள் (1975-76) என்க்கு, என் அன்னை யின் பெயரால் அமைத்த அறப்பணி பற்றிய கல்விக் கூடங் களின் வளர்ச்சியில் போதிய கருத்திருத்த வேண்டிய நிலை யிலும், முப்பத்ாண்டு என்னை ஏற்றுப் போற்றிய வளர்ப்புத் தாயின் சொல்லைத் தட்டாமல் ஒராண்டு அப்பணியினையும் ஏற்றுச் செயலாற்றினேன். அப்போது பயின்ற மாணவர் பலரும் இன்று வரை என்னிடம் அன்பும் பாசமும் உடையவர் களாகவே இருக்கிறார்கள்.