பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஆனந்த முதல் ஆனந்த வரை மிளகுத் தூளையும் வெல்லத்தையும் கொண்டு வைத்தார்கள். வந்த விருந்தாளி சுக்குக்காப்பி வைக்க அடுப்படியில் உட்கார்ந் தார்கள். அடுப்படிக்கு நேராகத் தாழ்வாரத்தில் ஒரு விசிப் பலகை இட்டிருக்கும். அதில் நான் உட்கார்ந்து படிப்பது வழக்கம். அன்றும் அப்படித்தான் உட்கார்ந்து இருந்தேன். உள்ளே காப்பி வைக்க உட்கார்ந்த அம்மையார் நான் இருப் பதைக் கவனிக்கவில்லை. காப்பிக்கு வெல்லம் போதாது என்றார்கள். அம்மா அறைக்குள் சென்று வேறு வெல்லம் எடுத்து வந்தார்கள். அதற்குள் அந்த விருந்தாளி முன் கொண்டு வந்த வெல்லக் கட்டியை எடுத்து இடுப்பில் புடவை இடுக்கில் சொருகிக் கொண்டார்கள். பின் அதை அவர் களுக்கு வேண்டியவர்களிடம் சென்று சேர்த்திருப்பார்கள். ஆயினும் அம்மா வந்தவுடன் அந்த வெல்லத்தைக் காப்பியில் போட்டு விட்டதாகச் சொன்னார்கள். நான் திகைத்தேன் இப்படியும் உறவினரா என்று! அதை நான் அம்மாவிடம் சொல்லவே இல்லை. சொன்னால் அப்போதே அவர்களிடம் சண்டையிட்டு என்றும் அவர்களை வீட்டுக்கு வராமல் செய் திருப்பார்கள் அவர்கள். அத்தனை கண்டிப்பு அவர் களுடையது. என்றாலும் என் உள்ளம் மட்டும் அவர்களைக் காணும் தோறும் நம்பிக்கைத் துரோகி என்று எண்ணிக் கொண்டே இருக்கும். இன்றைக்கும்கூட அவர்கள் செய்து விட்ட அந்தச் சிறுசெயல் யாரையும் ஆராயாது நம்பாதே' என்று புத்தி புகட்டிக் கொண்டே இருக்கிறது. இன்னொரு உறவினர் எங்கள் வீட்டில் உண்டான சிறு பாகப் பிரிவினையைத் தீர்க்க வந்தார். என் அம்மாவுக்கும் பெரியம்மாவுக்கும் உண்டான பாகப்பிரிவினை அல்ல. அது வேறு ஒரு பாகப் பிரிவினை. அதில் உள்ள அத்தனையையும் எங்களுக்கும் எதிரில் உள்ள மற்றவர்களுக்கும் பங்கிட்டுக் கொடுத்தல்தான் முறை. ஆனால் அவர் அப்படிச் செய்ய