பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் á? செய்வார்கள். அதனால் தான் அம்மா மிகவும் கோபித்துக் கொண்டார்கள். அவர்களும் கெட்டவர்களோடு சேராதே' என்றார்கள். ஆனால் யார் நல்லவர், யார் கெட்டவர் என்று கண்டுபிடிக்க முடியாதே என்று திணறினேன். திக்திக்திக்கிப் பேசுபவர் நல்லவரா? அல்லது திட்டி அதட்டி நல்வழி காட்டுபவர் நல்லவரா? ஒன்றும் தெரியவில்லை. பின்னால் நல்லவர் கெட்டவர்களைப் பற்றிப் பலப்பல பாடல்களையும் பாடங்களையும் படித்தேன், என்றாலும் இன்னும் நல்லவர் செட்டவர்களைக் காணமுடியவில்லை. அன்று அம்மாவும் ஆசிரியரும் சொன்ன நல்லவர் யார்? என்ற வினாவிற்கு. இன்னும் விடை சாண முடியவில்லை. பொதுவாக உள்ளத் தால் நல்லவரைத் தேடி அடையவேண்டும் எனத் திருக்குறள் முதலிய பல நூல்கள் பறைசாற்றுகின்றன. உள்ளத்தை எதனால் அளப்பது? உதட்டாலா? அம்மம்மா! வேண்டாம், வேண்டாம். ஆகா! மேடைமேல் ஒழுக்கத்தைப் பற்றித் தவறாது பறைசாற்றுவதுபோல் பேசிப் பின் வாழ்வில் ஒழுக்கத்தைக் கனவிலும் கருதாதவர்கள் நல்லவர்களா? உள்ளத்தை எவ்வாறு உணர்வது? எனினும் நல்லவர்கள் இல்லாமல் இல்லையே! ஒருவர்கூட இல்லையானால் வானம் பொய்த்து மழைவளம் கெட்டு அனைத்தும் அழியும் என் கிறார்களே! பண்புடையார் பட்டுண்டு உலகம் அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன். என்ற குறள் என் நினைவுக்கு வருகிறது, ஆகவே நல்லவர் வாழத்தான் வேண்டும். அந்த நல்லவரைக் காண்பது எப்படி? பாரதத்திலே ஒரு கதை உள்ளதாகக் கர்ண பரம்பரை வழக்கு உண்டே தருமபுத்திரர் உலகிலே கெட்டவரைத் தேடிக் காணாமல் அலுத்தார் என்றும், துரியோதனன் நல்ல வரைத் தேடிக் காணாமல் நின்றான் என்றும் சொல்லுவர்,