பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஆனந்த முதல் ஆனந்த வரை வீசாது ஆண்ட அல்லியை எப்படியோ அறிந்து காதல் கொள்ளுகின்றான் அர்ச்சுனன். கிருஷ்ணனுக்குத் தெரியா வகையிலே எப்படியும் அவளை அடைய முயன்றான். தெருக் கூத்துப் போன்று அது அமையினும் நாங்கள் பள்ளிக் குழந்தை கள் நடித்தமையின் அதற்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. எங்கள் தெரு நண்பர்கள் இருவர் தாம் அல்லியாகவும் அர்ச்சுன னாகவும் நடித்தார்கள். அந்த நாடகத்தில் எனக்குக் கிருஷ்ணன் பாகம்தான் கொடுத்திருந்த தென்றாலும் ஒத்திகை பலமுறை நடத்தியதால் எல்லாப் பாகங்களுமே எனக்கு மனப்பாடமாக வந்துவிட்டன. எனக்கு அப்போது இராகத்தோடு பாடுவதென்பது இயலாது. ஆகவே எனக்குப் பாட்டு அதிகமில்ல்ை. என்றாலும் அல்லிக்கும் அர்ச்சுன னுக்கும் ஒரு சில பாட்டுகள் இருந்தன. அவை இன்றும் என் மனத்தில் எப்படியோ இடம் பெற்று இருக்கின்றன. கிருஷ்ணன் படுத்துக் கொண்டு அர்ச்சுனன் காலில் தலையைவைத்து உறங்குகிறான். அர்ச்சுனன் அப்போது தனியாகச் சென்று அல்லியைக் காண நினைத்து அவனுக்குப் பாராங்கல்லைத் தலையணையாக வைத்துப்போகிறான். இதற்கு ஒரு பாட்டு. இன்றும் தமிழ்ச் சினிமாக்களின் விறு விறுப்பை வெறும் சத்தற்ற பாட்டுக்களை இட்டுக் கொலை செய்வதை நாம் காண்கிறோ மன்ற்ோ! அது போன்ற பாட்டுக்கள் தாம் அன்றைய நாடகப் பாடல்களும். 'தக்கப் பாராங் கல்லைத் துக்கி-மாமன்-தலைக் . (குயரம தாக்கி பக்குவமாய் வழி நோக்கி-சென்று-பார்ப்போம் . (அல்லியைக் கண்டுதேடி. அன்பாய் அல்லியை மணந்து-அவள்-ஆசை . (தணியவே சுகித்து இன்பமாய் நம்மோ டழைத்து நாம்-இந்திரப் - (பிரஸ்தம் செல்வோமே”