பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 55 நாடகத்தைப் புகழ்ந்தார். அன்று கழிந்தது. ஆனால் என்னை நாடகம் விடவில்லை. எனது எதிர் வீட்டில் இரண்டு பாட்டி கள் இருந்தார்கள். பக்கத்திலும் பெரியம்மாவும் வேறு சில பெண்களும் இருந்தார்கள். நாடகம் முடிந்த மறுநாளிலிருந்து எல்லாரும் எங்கள் தெருவில் கூடிவிடுவார்கள். என்னை அந்த நாடகப் பாடல்களை யெல்லாம் பாடச் சொல்லு வார்கள். நான் உள்ளே ஓடி விட்டாலும் ஒடிவிடுவேன். என் பாட்டியும் கற்றதைக் காச்சியா குடிக்கப் போகிறாய்; ஏதோ ஆசையாகக் கேட்கிறார்களே பாட்டிகள் என்று பாடுவாயா! என்னமோ பிகுப் பண்ணுகிறாயே’ என்பார்கள். அவர்கள் சொல்லுக்கு நான் மறுபேச்சே, பேசுவது கிடை யாது. நாள்தோறும் இப்படி எங்கள் தெருவே நாடக மேடையாய்க் கழிந்தது, அடுத்த இரண்டு மூன்று ஆண்டு களில் நான் பல தடவை அவர்களுக்காக இந்த நாடகப் பாட்டுகளைப் பாடி இருப்பேன். இராகம் ஒன்றும் தெரியா விட்டாலும் அந்தக் கிழங்களுக்கு எப்படியாவது பாட்டைக் கேட்பதில் ஒர் ஆசை. நான் வாலாஜாபாத்தில் எட்டாவது படிக்கும் காலத்தில் கூட ஒரிரு நாட்கள் அப்பாடல்களை அவர்களுக்காகப் பாடி இருக்கிறேன். இப்படி ஆரம்பப் பள்ளியில் படித்து, நடித்து, பிறகு ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புக்கு வாலாஜாபாத் திற்கு வந்து ாேர்ந்தேன். ஊரில் படித்த அந்த ஐந்து ஆண்டு களில் நடைபெற்ற எத்தனையோ நிகழ்ச்சிகள் இன்னும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து கொண்டே இருக்கின்றன. ஒரு சில கண்டு மேலே செல்லலாம். -