பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 57 விடுவேன்; என்றாலும் வேடிக்கையாக இடது கை முட்டியை மடித்துக் கொண்டு வலது கையால் மத்தளத்தின் ஒரு பக்கத்தை அடிப்பது போல் அடித்துக் கொள்வேன், அங்கு உட்கார்ந்து கொண்டே அவர்கள் அடிக்கும் போதே அப்படி வேடிக்கையாக அடிப்பதும் உண்டு. தனியாகத் தெருவில் செல்லும்போது கூட எதையோ எண்ணிக் கொண்டே கைத் தட்டுதலையும் செய்து கொண்டிருப்பேன். இப்போதும் சிலர் சினிமாப் பாடல்களைத் தம்மை மறந்து தெருவில் பாடிக் கொண்டு போவதைப் பார்க்கலாமல்லவா. என் மத்தள நண்பருடைய தந்தையார் வயதானவர். அவர் எப்போதும் திண்ணைமேல் உட்கார்ந்து கொண்டிருப் பார். உள்ளே நாங்கள் செய்யும் ஆர்ப்பாட்டங்கள் சில சமயம் அவருக்குத் தொல்லை தரும். ஏண்டா பசங்களா? உங்களுக்கு வேலை இல்லையா? இங்கே வந்து எல்லாம் கூத் தடிக்கிறீர்களா? என்று கோபிப்பார். என்றாலும் அவர்தம் மகனார் எப்படியாவது நன்றாக மத்தளம் தட்டக் கற்றுக் கொள்வதில் அவருக்குத் தனி ஆர்வம் இருந்த காரணத்தால் எங்கள் தொல்லைகளை யெல்லாம் கூடியவரையில் பொறுத்துக் கொள்வார். . ஒருநாள் காலை நான் தெரு வழியாக எங்கள் வீட்டுப் பசுமாடுகளை மந்தைக்கு ஒட்டிக் கொண்டு போனேன். எங்கள் தொழுவத்திலிருந்து தெருவழியாகத்தான் மாடுகளை ஒட்டிச் செல்ல வேண்டும். நாள்தோறும் நான் காலையில் எழுந்து மாட்டை ஒட்டிக் கொண்டு சென்று மந்தையில் விட்டுவிட்டு, அப்படியே ஆற்றுக்குச் சென்று கால்ைக்கடன் களைக் கழித்து, துணி துவைத்து நீரில் மூழ்கிவிட்டு வருவது வழக்கம். அப்படியே அன்று காலையில் மாடுகளை ஒட்டிக் கொண்டு சென்றேன். எங்கள் வீட்டில் பயிர் எல்லாம் எடு பட்ட்தால் உழும் மாடுகளையெல்லாம் விற்றுவிட்டோம். பால் தயிருக்காக மட்டும் இரண்டொரு பசுக்களை வைத்துக்