பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

岔2 ஆனந்த முதல் ஆனந்த வரை விட்டன என்று கூப்பாடு போட்டார். பூசை வேளை இல்லையே! ஏனடா கதவைத் திறந்தாய் என்று தூரத்திலி ருந்த வேலைக்காரன் மேல் எரிந்து விழுந்தார். அவன் பாவம் அப்போதுதான் ஒடிக் கதவை அடைக்க முயன்றான். போடா போ’ என்று அவனை அதட்டினார். நாங்கள் உண்மையில் பயந்து விட்டோம். டே பசங்களா! இங்கே வாருங்கடா என்று அவர் அதட்டிக் கூப்பிட்டார். எங்களை ஏதோ செய்யப் போகிறார் எனப் பயந்து கொண்டே அருகே சென்றோம். ஐயரைக் கூப்பிட்டு இந்தச் சனியன்களுக்கு இரண்டு கை போடுங்கள்; தொலையட்டும்’ என்றார். அவர் உடனே தம் திருக்கையால் எடுத்து ஆளுக்கு ஒரு கைச் சர்க்கரைப் பொங்கலைக் கொடுத்தார். ஒடி விடுங்கள், போய் ஆற்றில் தின்னுங்கள். யாரிடமும் சொல்லாதீர்கள்' என்று ஆணையிட்டு எங்களை வெளியே அனுப்பிவிட்டுக் கதவைச் சாத்திக் கொள்ளச் சென்றார். 'பாவம்! அவர் தர்மகர்த்தா. கோயில் அறத்தைப் பாதுகாக்க வந்த உத்தமர். கோயில் பணத்தை எல்லாம் பிறர் கொள்ளைகொள்ளா வகையில் பாதுகாத்து,நல்லமுறை யில் அறம் சிறக்கச் செயலாற்ற வேண்டிய அன்பர் அவர். ஆனால் அன்றாடம் கோயில் பணத்தில் இப்படிப் பலப்பல பண்டம் பலகாரங்கள் செய்து மாலைதோறும் தாம் சுவைத்து உண்பதோடு வீட்டுக்கும் கொடுத்தனுப்புவாராம். அப்பாவி களாகிய நாங்கள் வேளை தெரியாது உள்ளே சென்று விட்டோம். ஆகவே அவர் வசைக்கு ஆளானோம். எங்கள் வீட்டில் அம்மா அடிக்கடி சொல்லுவாள் கோயில் சொத்துக்கு ஆசை வைக்காதே’ என்று. இப்போது கோயில் சோறு என் கையில் இருந்தது. அதன் மணம் முக்கைத் துளைத்தது. அதைச் சாப்பிடுவதா வேண்டாமா என எண்ணிக் கொண்டே இருந்தேன். என் நண்பனோ அதை நன்றாகச் சுவைத்துச் சாப்பிடத் தொடங்கி விட்டான்.