பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 ஆனந்த முதல் ஆனந்த வரை பாட்டியார் துணையாக உடன் இருந்தாலும் பெரும்பாலும் மலர் எடுத்தல், மலர் தொடுத்தல் முதலிய பணியிலேயே அவர்கள் காலம் கழிந்தது. எனது வாழ்வோ அன்னையின் ஆணைக்கு அஞ்சி அஞ்சி, கூடியவரையில் மற்றவர்களோடு கலக்கா வகையில் அமைதியாகச் சென்றது. என் பெரியம்மாவுக்கு ஒரு குழந்தையும் பிறக்கவில்லை. அவரும் பெரியப்பாவும்தாம் அவ்வீட்டில். இரண்டு வீடும் பக்கத்துப் பக்கத்து வீடுகள். என் பாட்டனாரும் பெரிய பாட்டனாரும் தனியாகப் பங்கிட்டுக்கொண்டு இருந்தார் களாம். பிறகு பெரிய பாட்டனாருக்குக் குழந்தைகள் இல்லையாதலால் சிலவற்றைக் கோயிலுக்கு எழுதி வைத்து விட்டு, மிகுந்த நிலபுலன்களையும் அந்த வீட்டையும் தம்பிக்கே கொடுத்துவிட்டு இறந்தாராம். இன்றும் என் பெரியம்மாவும் அம்மாவும் பாகம் பிரித்துக்கொண்டார்கள். பெரியம்மாவுக்குக் குழந்தைகள் இல்லை. எனவே மறுபடியும் இரண்டும் ஒன்று சேரப்போகிறது என்று ஊரில் உள் ளவர்கள் பேசிக்கொண்டார்கள். ஆகவே எங்கள் பெரியப்பா அப்பேச்சுக்களை முறியடிக்கவேண்டும் என நினைத்தார். மறுமணம் செய்துகொண்டு எப்படியாவது குழந்தைகளைப் பெற்று அந்தச் சொத்து’க்கு உரியவர்களாக்க வேண்டும் என முடிவு செய்தார். ஊரில் பல நல்லவர்'களும் அவருக்குத் துணையாக இருந்தார்கள் என்பர். என் பாட்டனார் எழுத்திலும் அவரவர் விருப்பம்போல் சொத்தைச் செலவிடலாம் என இருந்தது. என்றாலும் சொத்துக்கள் அனைத்தும் என் பெரியம்மா பேரில் இருந்த தால் அவர் வற்புறுத்தவில்லை. இப்படிப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த இரு உடன் பிறந்த தாயர்களும் வாழ்ந்து வந்தார்கள். எனினும் அவர்கள் மனம் வேறுபட்டே வாழ்ந்து வந்தார்கள். முன் பாகப் பிரிவினையில் அவர்கள் கொண்ட வேறுபாட்டை ஊரிலுள்ளவர்கள் மேலும்