பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 67 வளர்த்துவிட்டார்கள் என்பர். எனவே உடன்பிறந்த சகோதரிகள் இருவரும் மிகக் கொடிய விரோதிகளாக மாறி விட்டார்கள். என்றாலும் என் பெரியம்மா மாத்திரம் என்னைக் கண்டால் அன்பாகக் கூப்பிடுவார்கள். என் அம்மா என்னைத் திட்டமாக அந்த வீட்டுப் பக்கம் கால் எடுத்து வைக்கக்கூடாது என்று கட்டளை இட்டிருந் தார்கள். ஆகவே நான் அந்தப்பக்கம் திரும்பினதுகூடக் கிடையாது. அப்படித் திரும்பிப் பார்த்தாலும் உடனே யாராவது அம்மாவிடம் வந்து கோள் சொல்லி விடுவார்கள். அன்று முழுவதும் நான் உதை வாங்க வேண்டியவன்தான். ஆகவே மிகவும் பயந்துபயந்து நான் நடந்துவந்தேன். நான் ஒரே பிள்ளை ஆனாலும் அம்மா என்னை அடித்து வளர்க்க அஞ்சமாட்டார்கள். ஒருநாள் நான் தெருவோடு வந்துகொண்டிருந்தேன். பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பிய நான் தெருவில் பெரியம்மா நின்றுகொண்டிருப்பதைக் கண்டேன். பக்கத்தில் எதிர்வீட்டுப் பாட்டியும் உடன் நின்றுகொண்டிருந்தார்கள். பெரிய்ம்மா என்னை வாடா கண்ணே! என்று கூப்பிட்டார் கள். நான் பயந்து ஒடத்தொடங்கினேன். அந்தப் பாட்டி என்னை நிறுத்தி 'அப்பா! பயப்படாதே. உன் பெரியம்மா உன்னிடம் எவ்வளவு அன்பாய் இருக்கிறார்கள். வா! உன்னைக் கட்டித்தழுவி முத்தமிட ஆசையாய்க் கூப்பிடு கிறார்களே' என்றாள். நான் மெதுவாக அம்மா' என்றேன். ‘எல்லாம் அம்மாவுக்குத் தெரியாது; வா’ என்று கையைப் பிடித்து இழுத்தார்கள். பெரியம்மா என்னைக் கட்டித்தழுவி முத்தமிட்டார்கள்; கண்ணிர் விட்டார்கள். பாவி குழந்தை யைக்கூட வரவேண்டாம் என்கிறாளே என்றார்கள். உண்மையில் அவர்கள் அழுவதைக் கண்டு அம்மா செய்தது தவறோ என்று கூட அன்று அந்த இளம் உள்ளம் எண்ணிற்று. எனினும் அதை எல்லாம் எண்ணி நிற்க