பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை தமிழ்க் காப்பியங்கள் வெறும் கதைகளை மட்டும் கூறுவன அல்ல. அக்கதைகளுடன் மக்கள் வாழ்வுக்குத் தேவையான-சமுதாய நலம்புரக்கும் நல்லபல நீதிகளையும் அறத்தாறு செல்லும் நெறிகளையும் சுட்டிக்காட்டியே தம் கதைகளை நடத்திச் செல்லுவன. அத்தகைய நிலையில் பெருங்காப்பியத்தினைச் சிறந்த முறையில் செய்த மானுட’ னாகிய கம்பர், தம் இராமாயணத்தில் பல வாழ்வியல் உண்மைகளையும் அறநெறிகளையும் அள்ளியள்ளி வழங்கி யுள்ளார். அவற்றுள் ஒன்றே இலங்கைக் காவல் தெய்வம் அநுமனுக்குக் கூறியது. き அநுமனை இலங்கை நகரில் புகாவண்ணம் தடுக்க முயன்ற அக்காவல் தெய்வம் அவனிடம் தோல்வியுற, இராவணனின் பல கொடுமைகளைக் கூறி, அந்த மறம் நீங்கி அறம் அரும்பும் காலம் வந்தது என்பதனை, 'அன்னதே முடிந்தது ஐய! அறம் வெல்லும் பாவம் தோற்கும் என்னும் ஈது உண்மை’ என்று காட்டும் உயரிய நெறியில் கம்பர் தம்முடைய கவிதையினை யாத்துள்ளார். ஆம்! அந்த உண்மை அன்று மட்டுமன்றி இன்றும், என்றும் உண்மை என்பதைச் சமுதாய வரலாறுகளும் பேரரசுகளின் வரலாறுகளும் தனி மனித வரலாறுகளும் காட்டுகின்றன-இனியும் காட்டும். இத் தகைய வாழ்க்கை நெறி தனிமனித வாழ்வில் நடைபெறும் என்பதை நான் என் வாழ்நாளில் பலநிகழ்ச்சிகளின் வழியே கண்டுள்ளேன்.