பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஆனந்த முதல் ஆனந்த வரை நேரமில்லை. நான் வாய்திறந்து ஒன்றும் பேசவும் இல்லை. பெரியம்மா என் கையில் ஒரு சிறிய பொட்டலம் ஒன்றைக் கொடுத்தார்கள், நான் வாங்க மறுத்தேன். மிட்டாய்” என்றும் பள்ளிக்கூடம் சென்றதும் சாப்பிடு’ என்றும் சொன்னார்கள். நான் அதைப் பத்திரமாக துணியில் முடிந்து கொண்டு ஓடினேன். வீட்டில் பகல் உணவு கொண்டு மறுபடியும் பள்ளிக்கூடம் புறப்பட்டுவிட்டேன். பள்ளிக்கூடத்தில் பெரியம்மா கொடுத்த பொட்டலத் தைப் பிரித்துப் பார்த்தேன். சில மிட்டாய்கள் இருந்தன. தின்றேன்; பக்கத்தில் உள்ள பிள்ளைகளுக்கும் கொடுத்தேன். ஆனால் அவ்வாறு கொடுத்ததால் பின்னால் பெருந் துன்பம் வரும் என்று தெரிந்திருந்தால் தனியாக ஒரு மரத்தடியில் அத்தனையும் தின்றுவிட்டு வந்திருப்பேன். எங்கள் தெரு நண்பர் சிலருக்கும் மிட்டாய் கொடுத்தேன். மிட்டாய் இனிப்பாய் இருந்தது. ஆனால் அன்று மாலை... எங்கள் தெரு நண்பன் ஒருவன் நேராக என் வீட்டிற்குச் சென்று அம்மாவிடம் இன்று சிவானந்தம் பள்ளிக்கூடத்திற்கு மிட்டாய் கொண்டு வந்தான்; யாவருக்கும் கொடுத்தான்' என்று சொல்லிவிட்டுப் போனான். அதற்காகத்தான் அவன் முன்னே ஓடிவிட்டான் என்பது பிறகு தெரிந்தது. நான் வீட்டிற்குச் சென்றதும் அம்மா என்னைக் கையில் கொம்புடன் வரவேற்றார்கள். ஆயர்பாடிக் கண்ணனை அதட்டுவதுபோல யசோதை கையில் கொம்புடன் நிற்பதாகப் படம் போட்டிருக்கும் காலண்டர்’களைப் பின்னால் பார்த்தி ருக்கிறேன், அதில் கண்ணன் பயப்படுவது போலப் பாசாங்கு செய்கிறார். நானோ உண்மையாகவே பயப்பட்டேன். என்னைப் பற்றி ஈர்த்து, மிட்டாய் ஏது?’ என்றார்கள். நான் 'எனக்கு மிட்டாயைப் பற்றி ஒன்றும் தெரியாது’ என்று பொய் சொல்லி வைத்தேன். ஆனால் அவர்கள் விடுபவர் களல்லர். வெளியார் யாராயிருந்தாலும்கூடப் பன்னிப்