பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ள்மையின் நினைவுகள் 69 | இ 6위 பன்னி மடக்கி மடக்கிக் கேள்விகள் கேட்டு எப்படியும் உண்மையான பதிலை அவர்கள் வரவழைத்து விடுவார்கள்; ஆகவே நான் தப்புவது எப்படி? பொய் சொல்லாதே’ என்று சொல்லிக் கொம்பால் ஒரு அடி கொடுத்தார்கள் என்றாலும் நான் உண்மையைச் சொல்லவில்லை. அம்மாவின் கோபம் உச்ச நிலைக்குச் சென்றது. அடிமேல் அடி விழுந்தது. அருகிலிருந்த பாட்டியோ ஐயோ ஏனடி குழந்தையைக் கொல்லுகிறாய்?" என்று கூச்சலிட்டுக் கொண்டே இருந்தார்கள். ஆனாலும் தாயார் விடுவதாக இல்லை. கடைசியில் அந்தக் கொடுமைக்கு ஆற்றாது மிட்டாய் வந்த வழியைச் சொல்லி விட்டேன். பாவி! அதை ஏன் வாங்கினாய்? விஷமிட் டாளோ என்னமோ என்று வைத் மேலும் இரண்டடி கொடுத்தார்கள். பின் அவர்கள் கோபம் பெரியம்மா பேரில் திரும்பியது. தெருமுன் சென்று பலவாறு பழித்துப் பேசி னார்கள். ஆடு பகை குட்டி உறவோ என்றெல்லாம் கூறினார்கள். அந்த எதிர் வீட்டுப் பாட்டி வந்து தானே அழைத்ததாகச் சொல்லிச் சமாதானம் செய்தும் கேட்க வில்லை. என் தாயார் இந்த வகையில் கண்டிப்பாக இருப்பதற்குக் காரணங்கள் காட்டுவார்கள். இரவு என்னைச் சாப்பிடச் சொன்னார்கள். நான் உடம்பெல்லாம் வலிக்கிறது என்றும் சாப்பாடு வேண்டாம் என்றும் அழுதேன். அடித்த கை அணைத்தது. எல்லாம் உன் நன்மைக்குத்தானே செய் கிறேன்; எனக்கு வேறு யாராவது இருக்கிறார்களா? உள் ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும். ஆமாம் மனத்திலே வஞ்சகம் வைத்து மேலுக்கு உறவாடுபவர் யாராயினும் நம்பக்கூடாது. நன்றாகத் தெரிந்துகொள். உள்ளத்தில் பகை வைத்து உறவாடுகிற கொடியவர்களைக் காட்டிலும் நேருக்கு நேர் நிற்கும்