பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. கன்னம் வீங்கிற்று அங்கம்பாக்கத்தில் ஐந்தாவது வரை படித்து முடித்து விட்டேன். பின்னர் வாலாஜாபாத்துக்குத்தான் படிக்கச் செல்ல வேண்டும். அங்கு அப்போது இரண்டு மூன்று உயர்தர ஆரம்பப்பள்ளிகள் இருந்தன. கிறித்தவப் பள்ளி ஒன்று இருந்தது. அதில்தான் சேர்தல் வேண்டுமென்று சிலர் சொன்னார்கள். என் தந்தையார் அப்போது வீட்டில் இல்லை. அன்னையாரோடு மாறுபட்டு வேறு எங்கோ சென்று வாழ்ந்திருந்தனர். ஆகவே என்னைப் பள்ளிக்கூடம் அழைத்துச் சென்று சேர்க்கப் பெரியவர்கள் ஒருவருமில்லை. என் பெரியப்பாவும் பெரியம்மாவும் பேசுவதுகூட இல்லை. ஊரில் யாரையோ பிடித்துக்கொண்டு சென்று வாலாஜா பாத்தில் கிறித்தவர் பள்ளியில் பணம் கட்டிச் சேர்ந்து விட்டேன். பள்ளியில் சேர்ந்த மறுநாள் நான் தெருவில் மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்தேன். மாலை ஆறு மணி இருக்கும். இருட்டும் வேளை. தாடியுடன் ஒரு பெரியவர் தெருவில் வந்தார். க.டவே இரண்டு மூன்று பேர் இருந்தார்கள். என் அருகில் வந்ததும் அப்படியே என்னைச் சேர்த்து அணைத்துக்கொண்டார் அவர். பிறகு வா விட்டுக்குப் போகலாம் என்றார். எனக்கு ஒன்றும் புரிய வில்லை. என்றாலும் அவருடனும் மற்றவர்களுடனும் வீட்டிற்குச் சென்றேன். அம்மாவும் பாட்டியும் இருந்தார் கள். அவர்களுடன் வந்த பெரியவர் பேசினார். இறுதியில் அவர் பெயர் மாசிலாமணி முதலியார் என்றும், அவர்தான் வாலாஜாபாத்தில் இந்துமத பாடசாலையை நடத்து கின்றவர் என்றும் என்னை அவர் பள்ளிக்கூடத்தில் சேருமாறு அழைக்கவே வந்தார் என்றும், நான் முன்னமே வேறு பள்ளியில் சேர்ந்து விட்டிருந்தாலும் தாங்கள் தம் பள்ளியில் எடுத்துக் கொள்வதாகக் கூறி அன்னையிடம்