பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 ஆனந்த முதல் ஆனந்த வரை இசைவு பெற்றார்கள் என்றும் அதன்படி மறுநாள் நான் அவர்கள் பள்ளிக்கூடத்திற்கே செல்ல வேண்டுமென்பதாக முடிவு செய்யப்பட்டதென்றும் அறிந்தேன். அவர் போகும் போது என்னைக் கட்டி அணைத்து முதுகில் தட்டிக் கொடுத்துச் சென்றார். இன்றும் அந்தக் காட்சி என் கண் முன் நிற்கின்றது. தந்தையின் அன்புப் பரிவை நன்றாக அறியாத எனக்கு அவர் பரிவு நல்ல உணர்வூட்டியது. ஆம்! தொடர்ந்து அவர் வாலாஜாபாத் அப்பா'வாகப் பலபேருக்கு வேண்டுவன உதவி அப்பள்ளியை நன்கு நடத்தி வந்தார். மறுநாள் முதல் நான் இந்துமத பாடசாலை மாணவன் ஆனேன். அந்தப் பள்ளியில் உயர் வகுப்புகளில் அதிக மாண வர்கள் இல்லை. கிறித்தவப் பள்ளியில்தான் உயர்ந்த வகுப்புகளில் பல மாணவர்கள் படித்து வந்தனர். இந்தப் பள்ளியில் மேல் வகுப்புகள் ஒவ்வொன்றிலும் சுமார் பத்து மாணவர்களே இருந்தார்கள். என்றாலும் இங்குக் கீழ் வகுப்புகளில் நிறைய மாணவர்கள் படித்து வந்தனர். இன்று பள்ளிக்கூடத்தில் இடமில்லை என்று சொல்லி மாணவர்களை வெளியேற்றும் காட்சியை ஆண்டுதோறும் கண்களில் காண் கிறோம். ஆனால் அன்று அந்த நிலை இல்லை. இத்துணைப் பெரும் அளவில் பள்ளிகள் அன்று வளர்ச்சி அடையவில்லை. என்றாலும், இருந்த சில பள்ளிக் கூடங்களிலும் போதிய மாணவர் தொகை இல்லாதிருந்தது. எனவே இந்துமத பாட சாலை முதல்வரும் ஆசிரியர்களும் ஆண்டுதோறும் பள்ளித் தொடக்க நாட்களில் சுற்றுப்புறக் கிராமங்களுக்குச் சென்று, பிள்ளைகளைத் தமது பள்ளிக்கு வருமாறு அழைத்து வருவார் களாம். அதே முறையில்தான் நான் அழைத்து வரப்பெற்று அந்த இந்துமத பாடசாலையில் மூன்று ஆண்டுகள் கல்வி பயின்றேன். பயின்ற அந்த ஆண்டுகள் மூன்றில் நான் பெற்ற அனுபவங்கள் பல, ஒரு சில இன்றும் உள்ளத்தைவிட்டு நீங்காமல் இருக்கின்றன. அவற்றுள் ஒன்றைக் காணலாம்.