பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 ஆனந்த முதல் ஆனந்த வரை இப்படி மாறி விட்டார்களா?' என்று அவர்களுக்கு இயல்பான முறையில் பலப்பல வார்த்தைகளைக் கொட்டிப் பேசினார் கள். உடனே ஆவேசம் வந்தவர் போல் அது என்ன வானாலும் சரி, நிலத்தை விடாதீர்கள். நமக்கே முடியுங்கள் நாலாயிரத்து நானூறுக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்றார் என் அன்னையார். ஆனால் அருகிலிருந்த பாட்டியார் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்து வள்ளிம்மா! விட்டுத் தள்ளு! இந்த நிலம் வந்து நமக்கு ஆகப் போவது ஒன்றுமில்லை. மீனாட்சிதான் வாங்கிக் கொள்ளட்டுமே என்றார்கள். ஆம். முதலிலேயே சொல்ல மறந்து விட்டேன், என் தாயார் பெயர் வள்ளியம்மை, பெரியம்மா பெயர் மீனாட்சி அம்மாள். பாட்டி சொன்னதை அம்மா காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. வந்தவரிடம் நாலாயிரத்து நானூறுக்கு முடியுங்கள் என்று திட்டமாகச் சொல்லி விட்டார். அவரும் சிரித்துக் கொண்டே சென்று விட்டார். அந்த விலை உயர்வில் அவருக்கும் பங்கு உண்டு என்ற உண்மை நெடுநாட் களுக்குப் பிறகுதான் தெரிந்தது. நிலம் கொடுப்பவரும் உடன் பிறந்தவர் போட்டியில் தாம் நிறையப் பொருள் பெறலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார். நான்கு நாட்கள் சென்றன. இதற்கிடையில் என் தாயாருக்கும் பெரியம்மாவுக்கும் இருந்த பேச்சு உறவு மறு படியும் முறிந்தது; வேறுபாடு அதிகமாயிற்று. ஒருவரை ஒருவர் பழித்துரைத்தார்கள். என்றாலும் தெருவில் உள்ள வர்கள் சமாதானம் செய்வதை விடுத்து வேடிக்கைப் பார்த் தார்கள். இருவரிமும் சென்று என்ன வந்தாலும் நிலத்தை விடவேண்டாம் என்றும் சிலர் உபதேசம் செய்தார்கள். ஒரு சிலர் என் தாயாரிடம் வந்து பேசும் பரிவினைக்கண்டு நான் கூடக் கசிந்ததுண்டு. ஆனால் அடுத்த சில ஆண்டுகளுக் குள்ளேயே அவர்களே பெரியம்மாவிடமும் அதேபோல் பரிவுடன் பேசினார்கள் என்பதை அறிந்த பிறகு, உடன்