பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் கினைவுகள் 85 குழந்தை உள்ளத்தால் அதை ஒரு விளையாட்டுப் பொருளாக நினைத்து அப்படியே எடுத்தேன். ஒரு ரூபாய் நோட்டு அது என்று தெரியும். தெரிந்தாலும் அதை மாற்றி ஏதேனும் பொருள் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் அதை எடுக்க வில்லை. ஏனெனில் அது கொண்டு ஏதாவது வாங்கி னால் உடனே அது எப்படியாவது என் தாயார் காதுக்கு எட்டும். உடனே எனக்குப் பெருந்தண்டனை கிடைக்கும். ஆகவே அதற்காகவும் நான் எடுக்கவில்லை. ஏதோ விளையாட்டுப் பொருளாகக் கருதி எடுத்து விட்டேன். அவ்வளவுதான். மாலை ஆறு மணி இருக்கும். விளக்கேற்றிவிட்டார்கள். அம்மா அந்த அலமாரியைத் திறந்தார்கள். இருந்த ஒரு ரூபாய் நோட்டுகளை எடுத்து எண்ணினார்கள். ஒன்பது இருந்தது போலும். மற்றொன்றைத் துருவித் துருவி ஆராய்ந்தார்கள். கிடைக்கவில்லை. என்னை அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை. எங்கே போயிருக்கும்? வரட்டும் கேட்கிறேன்’ என்று தனக்குள்ளாகவே சற்று உரத்துப் பேசிக் கொண்டார்கள். சிறிது நேரம் கழித்துக் கோயிலுக்கு மலர் மாலை கொடுத்து விட்டுப் பாட்டி வீடு திரும்பினார்கள்; அவர்களைக் கேட்டார்கள். அவர்கள் தான் பார்க்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். வேறு ஏதோ சொல்ல வாயெ டுத்தார்கள். என்றாலும் சொல் வெளியில் வராதபடி அடக்கிக் கொண்டார்கள். ஒரு வேளை "பையன் கதவைத் திறந்தான். அவனைக்கேட்டால் தெரியும் என்று சொல்ல நினைத்து வாயைத் திறந்திருக்கலாம், ஆயினும் அவ்வாறு சொன்னால் அம்மா என்னை அடித்து அது பற்றி வற்புறுத்திக் கேட்பார்கள் என்று அஞ்சி வந்த சொல்லையும் உள்ளடக்கிக் கொண்டார்கள் என நினைத்தேன். என் அம்மா, அப்பாவின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள்.