பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 யினைத் தொகுத்துப் பின் எழுத நினைககின்றேன். சில ஆண்டுகளுக்கு முன் நான் எழுதி வெளியிட்ட, திரும்பிப் பார்க்கிறேன் திகைத்து நிற்கிறேன்' என்ற நூலில் எங்கள் வள்ளியம்மாள் கல்வி அறம் தோன்றி வளர்ந்த வகையினையும் அதனொடு இணைந்த என் வாழ்வினையும் குறித்துள்ளேன். எனினும் இன்றுவரை, அடுத்த இருபது ஆண்டுகளின் (19741994) வாழ்க்கைக் குறிப்பினைப் பின் வெளியிட எண்ணி யுள்ளேன். மூன்று பகுதியாக உள்ள என் வாழ்க்கைக் குறிப்பு இன்று 'ஆனந்த முதல் ஆனந்த வரை' என்று வெளிவருகிறது. அங்கங்கே என் உயர்வு தாழ்வுகளையும் உற்ற செயல்களையும் குறித்துள்ளேன். வாழ்க்கை பற்றிய நூல்கள் அதிகம் இல்லாத நிலையில், என்றுாலைத் தமிழகம் ஏற்கும் எனும் துணிபுடையேன். ஏற்று நலம் கண்டு குறையிருப்பின் சுட்டிக்காட்டித் திருத்த வேண்டுகிறேன். என் வாழ்வில் துணை நின்ற அனைவருக்கும் நன்றியுடையேன். இந்நூல் அச்சிடுங்கால் ஒப்பு நோக்கிப் பிழைதிருத்தி உதவிய பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் சா. வளவன் அவர்களுக்கு என் நன்றி உரித்து. வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித்திருநாடு’ -பாரதியார் 25-12-92 } பணிவுள்ள, தமிழ்க்கலை இல்லம் 参 ● 醬 அ. மு. பரமசிவானந்தம்