பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 ஆனந்த முதல் ஆனந்த வரை மனைவியிடம் வசைகேட்டு வாடவேண்டி இருந்தது. ஆயினும் அந்த நிலையில் நான் ஒன்றும் செய்யமுடியாமல் திகைத்தேன். யாரிடமாவது இதைச் சொன்னால்தான் மனம் நிறைவுபெறும் என்று அன்றுமுதல் நான் நினைத்துக் கொண்டுதான் இருந்தேன். ஆயினும் யாரிடமும் சொல்ல வில்லை. இதோ இன்று இந்த நூல்வழிதான் அன்று நான். செய்த களவினைக் கூறி எனது மாசினைக் கழுவும் கழுவாயினைத் தேடிக்கொள்ளுகிறேன். 13. விழாவும் வேட்டியும் எங்களுர்க் கோயிலைப்பற்றி முன்னமே சொல்லி இருக்கிறேன் அல்லவா! அதற்கு அறக்காப்பாளர்கள் மூன்றாண்டுக்கு ஒருமுறை தேர்ந்தெடுக்கப்படுவர். அந்தத் தேர்தல் காலங்களிலெல்லாம் அடிக்கடி சண்டை நிகழும். வேளாண்குலத்தில் பிறந்தவராகி, ஒரே இனமாக உறவு பற்றி வாழும் அந்தக் கிராமத்தில் கோயில் காரணமாக இவ்வாறு அடிக்கடிச் சண்டை நிகழ்வதுண்டு. கோயிலுக்கு நிலத்தின் வழி நல்ல வருமானம் வந்துகொண்டிருந்தது. மேலும் இந்தக்காலத்தைப்போன்று அன்று மேலே கணக்குக் கேட்க அரசாங்க ஏற்பாடுகள் ஒன்றும் திட்டமாகக் கிடையா. எனவே அந்தப் பதவிக்கு வந்தால் மனம்போலப் பொதுப் பணத்தைச் செலவு செய்ய யாருக்கும் வாய்ப்பு இருந்தது. ஆதலாலே மூன்றாண்டுக்கு ஒருமுறை அந்தப் பதவிக்குப் போட்டியும், அடிதடிகளுடன் தேர்வும் நடைபெற்றுவந்தன. என்றாலும் கோயில் பணிமட்டும் முட்டின்றி நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இந்தக் கோயிலால் வளர்ந்த கட்சி வேறுபாடே பிறகு ஊரில் பல கொலைகளை விளைக்கும் பெரும் சண்டையாக மாறிவிட்டது என்பதைப் பின்னர் காணலாம்,