பக்கம்:ஆனந்த முதல் ஆனந்த வரை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளமையின் நினைவுகள் 97 என் நண்பர்களுடன் தோட்டத்தின் பின்புறம் விளையாடச் சென்றுவிட்டேன். கோலி விளையாடிக் கொண்டிருந்தேன் என நினைக்கிறேன். வெளியூர்களிலிருந்து பல பணியாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களுள் சிலர் நாங்கள் விளையாடு வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னை அறியாத ஒருவர் 'பாவம், இறந்தவருக்குக் கூட இம்மாதிரி ஒரு பிள்ளை இருக்கிறதாமே! அதை விட்டுவிட்டு அவர் போய் விட்டாரே என்றார். ஆனால் அவர் பக்கத்தில் இருந்த என்னை நன்கு அறிந்த ஒருவர் 'அடடே! இதோ கோலி ஆடுகிறதே, இதுதான் அவர் பிள்ளை; உனக்குத் தெரி யாதா?’ என்றார். அதுவரையில் என்னை மறந்து விளை யாடிக் கொண்டிருந்த நான், அவர்கள் பேச்சைக் கேட்டு அமர்ந்துவிட்டேன். முன்னவர் 'பாவம் தந்தை இறந்த வருத்தம் கூடத் தெரியாது இப்படிப் பால் தெளித்த கையோடு கோலியாடுகிறது. பிள்ளைகளின் நிலையே நிலை; கவலையற்று அவை வாழ்கின்றனவே” என்றார். அச்சொற்கள் என் காதுகளைத் துளைத்தன. அப்போதுதான் நான் செய்த தவறு எனக்குப் புரிந்தது. என்றாலும் நான் விளையாட்டை நிறுத்தவில்லை. அதில்தான் என் விளை யாட்டுப் புத்தி விளங்கிற்று. பேசிக் கொண்டிருந்த இருவரும் சிறிது நேரம் பார்த்து எனக்காக இரக்கப்பட்டு அப்பால் சென்று விட்டார்கள். ஆனால் நான் விளையாடிக் கொண்டே இருந்தேன். அன்றைக்கு அந்த விளையாட்டைப் பற்றி நான் அதிக மாக நினைக்கவில்லை. எனறாலும் வயது ஆக ஆக அந்தப் யெரியவர் கூறிய சொற்கள் அடிக்கடி என் நினைவில் வந்து கொண்டே இருக்கும். இப்படி உற்ற தந்தையார் செத்துக் கிடக்க, நான் கோலியாடி விளையாடிக் கொண்டிருந்த இழி தகைமையை எண்ணி நைந்தேன். அண்ணல் காந்தி ஆ-7