பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆனையும் பூனையும்.pdf


ஆனையொன்று வந்ததாம்
அசைந்தசைந்து நடந்ததாம்
பூனையொன்று பார்த்ததாம்
பதுங்கிக் கிட்டச் சென்றதாம்
ஆனை மேலே ஏறியே
அழகாய்ப் பவனி வந்திடப்
பூனை யாசை கொண்டதாம்
பதுங்கிப் பதுங்கிச் சென்றதாம்
ஆனை காதை ஆட்டியே
அங்குமிங்கும் பார்த்ததாம்
தூணைப் போலக் காலிலே
தொத்தியேற எண்ணியே
பூனை பதுங்கி யானையின்
வாலின் பக்கம் போனதாம்
ஆனை தும்பிக் கையினை
ஆட்டிச் சத்தம் செய்ததாம்
பூனை பயந்து நடுங்கியே
பாய்ந்து ஓடி மறைந்ததாம்
ஆனையொன்று வந்ததாம்
அசைந்தசைந்து சென்றதாம்.