பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆனையும் பூனையும்.pdf

மீனே மீனே மின்னும் மீனே

தண்ணீ ருக்குள் தாவும் மீனே

கெண்டை அவுரி கெளுத்தி மீனே

எந் நேரமும்நீ தண்ணீ ருக்குள்

மூழ்கியிருந்தால் மூச்சடைக் காதோ?

எந்நே ரமும் தண்ணீர் வீட்டில்

குஞ்சுக ளுடனே கூடியி ருந்தால்

சொக்கா யில்லை துணிகளு மில்லை

கம்பளி யாடைகள் கட்டவு மில்லை

கூதல் வந்தால் ஏதுநீ செய்வாய்?