பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஆனையும் பூனையும்.pdf

 கருடா கருடா

வட்டமிடுங் கருடா-திருமால்

வாகனமாங் கருடா

பட்டமதைப் போலே-அசையாது

பறந்து மிதக்குங் கருடா

சங்கு முகத்துக் கருடா-தரைமேல்

தாவிப்பாயும் கருடா

எங்கள் தாத்தா கண்டால்-உடனே

எழுந்து வணங்கும் கருடா