பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.


ஆனையும் பூனையும்.pdf


கோழி கோழி கொ கொ கொ
கொண்டைச் சேவல் கொக் கரக்கோ
குயிலே குயிலே கூ கூ கூ
கொஞ்சுங் கிளியே அக்கக்கா
காக்கை காக்கை கா கா கா
கத்துங் குருவீமர் மெய் மெய் மெய்
அன்பாய்த் தீனி வை வை வை
மாடே மாடே மா மா மா
வண்டிக் குதிரை ஹீ ஹீ ஹீ
ஆடே ஆடே மே மே மே
அசையும் எருமை ஙொய் நொய் நொய்
பூனை பூனை மியாவ் மியாவ் மியாவ்
பூச்சி நாயே லொள் லொள் லொள்
அவைநம் தோழர் மெய் மெய் மெய்
அன்பாய்த் தீனி வை வை வை.