பக்கம்:ஆனையும் பூனையும்.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.ஆனையும் பூனையும்.pdfஅம்மா அம்மா கன்றுக் குட்டீ
ஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீ
சும்மா சும்மா கத்தாதே
அம்மா சீக்கிரம் வந்திடுவாள்.

அம்மா அம்மா கன்றுக் குட்டீ
ஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீ
பச்சைப் புல்லு நான் தருவேன்
பசியைப் போக்கிக் கொள்ளாயோ?

அம்மா அம்மா கன்றுக் குட்டீ
ஆரைக் கூப்பிட்டாய் கன்றுக் குட்டீ
அம்மா சீக்கிரம் வந்திடுவாள்
அன்பாய்ப் பாலும் தந்திடுவாள்.