பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


3 ஆன்மீக ஞானிகள் : அன்னை - அரவிந்தர்! மண்ணில் நாற்பதாண்டுகள் கழித்து, அருளாளர் அரவிந்தர் தனது அரசியல் போராட்ட வாழ்க்கையை முடித்துக் கொண்டு 4.4.1910-ஆம் ஆண்டன்று புதுச்சேரி நகர் வந்தடைந்தார்; வள்ளல் பெருமானுடைய அருள் நயந்த நன்மார்க்கராக, சன்மார்க்கராக, ஆன்மீகக் குணத்தைப் பரப்பும் மகானாக அவர் மாறினார்.

அருளாளர் அரவிந்தர் புதுச்சேரி நகர் வந்தடைந்தபோது, புதுச்சேரி மாநிலம் பிரெஞ்சு அரசு ஆட்சி அதிகாரத்திலே செல்வாக்குப் பெற்றிருந்தது. தனது ஆன்மீக ஞான ஒளியை மக்களிடம் பரப்புவதற்கு ஏற்ற இடம் புதுச்சேரி நகர் தான்் என்பதை, மகான் அங்கே அரவிந்த மகரிஷி நன்கு உணர்ந்தார்.

அதே நேரத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சியின் தொல்லை கள் தம்மைத் துன்புறுத்தாத சுதந்திர பூமி எது என்பதை உணர்ந்து அங்கே அரவிந்த ஆசிரமத்தை மகான் துவக்கினார்:

அரவிந்தர் ஆசிரமம் நல்ல செல்வாக்கோடு வளர்ந்து வந்த காலத்தில், அன்னை அவர்கள், 24.04.1920-ஆம் ஆண்டன்று, ஜப்பான் நாட்டிலே இருந்து கப்பல் மூலமாகப் புதுச்சேரி நகரை வந்தடைந்து, அருளாளர் அரவிந்தரைச் சந்தித்தார்:

1920-ஆம் ஆண்டில் மகான் அரவிந்தரைச் சந்தித்த அன்னை அவர்கள், 17.11.1973-ஆம் ஆண்டு, அன்னை அமரர் ஆகும் வரை, புதுவை நகரை விட்டு அகலாமல், இறைவனது ஆணைப்படி, மகரிஷி அரவிந்தர் தெய்வீகப் பணியிலே ஈடுபட்டார். அவருடைய எண்ணத்தை நிறைவேற்றி வைக்கும் ஆக்கப் பணிகளிலே அன்னை தனது வாழ்க்கையை ஆன்மீகத் துறைக்குத் தியாகம் செய்தார்.

என்ன காரணம், அன்னை அவர்கள் இந்த ஆன்மீக ஊழியத்தை மக்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தது தேவ ஊழியத்திற்கு என்றால், சிறிய வயது முதலே ஆண்டவன் தன்னை இந்த இறை தொண்டுக்கு எல்லா வகைகளிலும் தயார் செய்து வந்திருக்கிறார் என்ற எண்ணத்தை அவர் சந்தேகத்திற்கு இடமின்றி உணர்ந்ததின் ஆர்வமே ஆகும்.