பக்கம்:ஆன்மீக ஞானிகள் அன்னை-அரவிந்தர்.pdf/101

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


புலவர் என்.வி. கலைமணி 99

கிருஷ்ணதன்கோஷ் டாக்டரல்லரா? அதனால், ஏராள மான வருமானம் உடையவராகவும் அவர் விளங்கினார். பாடுபட்டுத் தேடிய பணத்தைப் புதைத்து வைக்கும் கஞ்ச புத்தியுடைய வரல்லர்! யாருக்கும் எந்தவித தர்ம காரியங்களுக் கும் தாராளமாகச் செலவு செய்யும் பண்பு கொண்டவராக இருந்தார்.

டாக்டரிடம் பணம் ஏராளமாகக் குவிந்திருந்தது. அதனால், அவர் பெற்ற மக்களை நீதிபதிகளாக, மாஜிஸ்டிரேட்டுகளாக, கலெக்டர்களாக, அரசாங்கத்தில் பணியாற்றப் பட வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். காரணம், தன் செல்வத்துக்கேற்ற மரியாதையும் மதிப்பும் சமுதாயத்தில் நிலவ வேண்டும் என்று விரும்பினார்.

அந்த எண்ணத்தால்தான்் குழந்தை அரவிந்தகோஷை, தார்ஜிலிங் நகரிலுள்ள செயிண்ட் பால்ஸ் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். அந்தப் பள்ளியில் பணக்காரர்கள் வீட்டுக் குழந்தைகள்கூட படிக்க முடியாது. ஏனென்றால், ஆங்கிலேயர் கள் குழந்தைகள் மட்டுமே படிப்பதற்காக நடைபெறும் பள்ளி அது இருந்தாலும், டாக்டர் கிருஷ்ணதன்கோவின் செல்வாக்கைக் கண்டு அந்தப் பள்ளி நிர்வாகிகள் ஐந்து வயதான் அரவிந்தகோஷக்கும் படிக்க இடமளித்தார்கள்.

ஆங்கிலேயர் குழந்தைகளுடன் அரவிந்தரும் சேர்ந்து படித்தார்; உணவுண்டார்; விளையாடினார்; அதனால், ஆங்கி லேயர்களது பழக்க வழக்கப் பண்பாடுகள் அரவிந்தருக் குள்ளும் ஊடுருவின.

தார்ஜிலிங், இயற்கை கோலாகலங்கள் நிரம்பிய இடம். அதனால், அரவிந்தர் அடிக்கடி தார்ஜிலிங்கின் இயற்கைக் காட்சிகளை ஆச்சர்யம் ததும்பக் கண்டு களிப்பார்.

அரவிந்தர் ஐந்து வயது சிறுவனாக இருந்தபோது தார்ஜிலிங் நகரத்துப் பள்ளியில் படிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், அவருக்குச் சிறுவயதிலேயே தனது பெற்றோர் களை விட்டுப் பிரிந்திருந்து கல்வி கற்க வேண்டிய சூழ்நிலை தோன்றியது.